நியாயமான இடமாற்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (21) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
2021, 2022 ஆம் ஆண்டுகளில் திருகோணமலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் கிடைத்து 5 வருடங்களாகியும் தமக்கு இன்னும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லையென தெரிவித்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2021, 2022 காலப்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டகளைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டது. தற்போது சுமார் 50 பேர் அளவிலே திருகோணமலையில் கடமை புரிகின்றோம்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சம்பளப் பிரச்சினைகளுக்கு மத்தியில் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்காக சம்பளத்தின் பெரும்பகுதியை செய்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் 5 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளோம்.
இதில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் இவர்களில் 95 வீதமானோர் திருமணமானவர்கள்.
இவ்வாறு தமக்கு பிரச்சினைகள் இருக்கும்போது தமது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுத் தருமாறு பல்வேறு தடவைகள் வலியுறுத்திய போதிலும் இன்னும் பலனளிக்கவில்லை எனும் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே 2027 ஆம் ஆண்டு இடமாற்றத்தில் தங்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்று தருமாறு கவனயீர்ப்பில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சொந்த மாவட்டத்துக்கு எப்போது 5 ஆண்டுகளாக காத்திருக்கும் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் நியாயமான இடமாற்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (21) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.2021, 2022 ஆம் ஆண்டுகளில் திருகோணமலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் கிடைத்து 5 வருடங்களாகியும் தமக்கு இன்னும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லையென தெரிவித்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.2021, 2022 காலப்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டகளைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டது. தற்போது சுமார் 50 பேர் அளவிலே திருகோணமலையில் கடமை புரிகின்றோம்.வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சம்பளப் பிரச்சினைகளுக்கு மத்தியில் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்காக சம்பளத்தின் பெரும்பகுதியை செய்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் 5 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளோம். இதில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் இவர்களில் 95 வீதமானோர் திருமணமானவர்கள். இவ்வாறு தமக்கு பிரச்சினைகள் இருக்கும்போது தமது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுத் தருமாறு பல்வேறு தடவைகள் வலியுறுத்திய போதிலும் இன்னும் பலனளிக்கவில்லை எனும் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே 2027 ஆம் ஆண்டு இடமாற்றத்தில் தங்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்று தருமாறு கவனயீர்ப்பில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.