• Apr 18 2026

மந்திரிமனையை இடித்துவிட்டு உல்லாச விடுதியா கட்டப்போகின்றீர்கள்? யாழில் வெடித்த போராட்டம்

Chithra / Sep 22nd 2025, 11:09 am
image

தமிழர்களின் தொன்மையை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இப் போராட்டம்   மந்திரிமனைக்கு முன்பாக இடம்பெற்றது. 

குறித்த மந்திரிமனையானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக உடைந்து விழுந்துள்ளது. 

இந்நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "இலங்கை அரசே தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, இந்த இடத்தை உரிமை கோருபவரே மந்திரி மனையை இடித்துவிட்டு உல்லாச விடுதியா கட்டப்போகின்றீர்கள், தொல்லியல் திணைக்களமே பௌத்த சின்னங்களை பாதுகாப்பதுபோல் தமிழரின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, மன்னன் சொத்து மக்கள் சொத்து; தனிநபரே உரிமை கொண்டாடாதீர்கள்" போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மந்திரிமனையை இடித்துவிட்டு உல்லாச விடுதியா கட்டப்போகின்றீர்கள் யாழில் வெடித்த போராட்டம் தமிழர்களின் தொன்மையை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டம்   மந்திரிமனைக்கு முன்பாக இடம்பெற்றது. குறித்த மந்திரிமனையானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக உடைந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "இலங்கை அரசே தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, இந்த இடத்தை உரிமை கோருபவரே மந்திரி மனையை இடித்துவிட்டு உல்லாச விடுதியா கட்டப்போகின்றீர்கள், தொல்லியல் திணைக்களமே பௌத்த சின்னங்களை பாதுகாப்பதுபோல் தமிழரின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, மன்னன் சொத்து மக்கள் சொத்து; தனிநபரே உரிமை கொண்டாடாதீர்கள்" போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement