சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நோட்டன் தியகல பகுதியில் அமைந்துள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்தின் அருகில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த கமகே தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் யாத்திரிகர்களுக்கு நோய் தொற்றா வண்ணம் பெலிமல் பாணம் வழங்க பட்டு அவர்களிடம் சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் மற்றும் மலைப்பகுதியில் உக்கா பொருட்கள் விட்டு செல்ல வேண்டாம் என்றும் கழிவு பொருட்கள் வீசி செல்ல வேண்டாம் என உபதேசம் செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் இவ்வாறான கழிவு பொருட்கள் மற்றும் உக்கா பொருட்கள் பிளாஸ்டிக் போத்தல்கள் பொலித்தீன் போன்ற வற்றை விட்டு சென்றதால் சாலை ஓரங்களில் மற்றும் ஏனைய பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுடைந்து வந்தது.அதனை தவிர்க்க வேண்டும் என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் அப் பகுதியில் உள்ள வன பகுதியில் தீ பரவல் காரணமாக அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து அவ் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கிளீன் ஸ்ரீ லங்கா நடவடிக்கை பற்றி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்வு சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நோட்டன் தியகல பகுதியில் அமைந்துள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்தின் அருகில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த கமகே தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் யாத்திரிகர்களுக்கு நோய் தொற்றா வண்ணம் பெலிமல் பாணம் வழங்க பட்டு அவர்களிடம் சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் மற்றும் மலைப்பகுதியில் உக்கா பொருட்கள் விட்டு செல்ல வேண்டாம் என்றும் கழிவு பொருட்கள் வீசி செல்ல வேண்டாம் என உபதேசம் செய்து வருகின்றனர்.கடந்த காலங்களில் இவ்வாறான கழிவு பொருட்கள் மற்றும் உக்கா பொருட்கள் பிளாஸ்டிக் போத்தல்கள் பொலித்தீன் போன்ற வற்றை விட்டு சென்றதால் சாலை ஓரங்களில் மற்றும் ஏனைய பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுடைந்து வந்தது.அதனை தவிர்க்க வேண்டும் என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் தெரிவித்தனர்.மேலும் அப் பகுதியில் உள்ள வன பகுதியில் தீ பரவல் காரணமாக அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து அவ் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கிளீன் ஸ்ரீ லங்கா நடவடிக்கை பற்றி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.