• Apr 19 2026

தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில் மசகு எண்ணெய், எரிவாயு விலை மீண்டும் உயர்வு

Chithra / Mar 5th 2026, 12:25 pm
image

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மேலும் உயர்வைச் சந்தித்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 77.86 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.59 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதன்படி, அதன் விலை 3.003 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.


தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில் மசகு எண்ணெய், எரிவாயு விலை மீண்டும் உயர்வு  மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மேலும் உயர்வைச் சந்தித்துள்ளது.உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 77.86 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.59 அமெரிக்க டொலராக நிலவுகிறது.இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதன்படி, அதன் விலை 3.003 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement