• May 17 2026

பனிக்கு மத்தியில் பிறந்த புன்னகை -முதியவரின் படைப்பாற்றல்!

Ziya / Jan 19th 2026, 5:58 pm
image

பனி படர்ந்த ஒரு மொட்டைமாடியில், சிவப்பு தொப்பியுடன் கூடிய அழகிய பனிமனிதனை உருவாக்கும் முதியவர் ஒருவரின்  காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.


குளிர்காலத்தின் கடுமையையும் மீறி, வாழ்க்கையை ரசிக்கும் மனநிலையுடன் அவர் பனிமனிதனை மிக நுணுக்கமாக வடிவமைக்கும் காட்சி பார்ப்பவர்களின் முகத்தில் தானாகவே புன்னகையை வரவழைக்கிறது.


இந்த காணொளி, வயது என்பது எண்ணிக்கையே தவிர, மனநிலைக்குக் கட்டுப்பாடு இல்லை என்பதற்கான அழகிய எடுத்துக்காட்டாக பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 


குழந்தைத்தனமான படைப்பாற்றலும், எளிய விஷயங்களில் மகிழ்ச்சி காணும் மனப்பாங்கும்  வயதைக் கடந்து தொடர முடியும் என்பதை இந்த காட்சி வெளிப்படுத்துகிறது.


சிறிய செயல்களே பெரிய உணர்வுகளை உருவாக்கும் என்பதையும், தலைமுறை வேறுபாடுகளைத் தாண்டி மனித உணர்வுகளை ஒன்றிணைக்க முடியும் என்பதையும் இந்த காணொளி வலியுறுத்துகின்றது.


“இது தான் உண்மையான இளமை”, “வயது உடலுக்கே, மனசுக்கு இல்லை” போன்ற கருத்துகளை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.


குளிர்ந்த பனிக்காலத்தில் பிறந்த இந்தச் சிறிய தருணம், அனைவருக்கும்  மகிழ்ச்சியளிக்கின்றது.


பனிக்கு மத்தியில் பிறந்த புன்னகை -முதியவரின் படைப்பாற்றல் பனி படர்ந்த ஒரு மொட்டைமாடியில், சிவப்பு தொப்பியுடன் கூடிய அழகிய பனிமனிதனை உருவாக்கும் முதியவர் ஒருவரின்  காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.குளிர்காலத்தின் கடுமையையும் மீறி, வாழ்க்கையை ரசிக்கும் மனநிலையுடன் அவர் பனிமனிதனை மிக நுணுக்கமாக வடிவமைக்கும் காட்சி பார்ப்பவர்களின் முகத்தில் தானாகவே புன்னகையை வரவழைக்கிறது.இந்த காணொளி, வயது என்பது எண்ணிக்கையே தவிர, மனநிலைக்குக் கட்டுப்பாடு இல்லை என்பதற்கான அழகிய எடுத்துக்காட்டாக பலராலும் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைத்தனமான படைப்பாற்றலும், எளிய விஷயங்களில் மகிழ்ச்சி காணும் மனப்பாங்கும்  வயதைக் கடந்து தொடர முடியும் என்பதை இந்த காட்சி வெளிப்படுத்துகிறது.சிறிய செயல்களே பெரிய உணர்வுகளை உருவாக்கும் என்பதையும், தலைமுறை வேறுபாடுகளைத் தாண்டி மனித உணர்வுகளை ஒன்றிணைக்க முடியும் என்பதையும் இந்த காணொளி வலியுறுத்துகின்றது.“இது தான் உண்மையான இளமை”, “வயது உடலுக்கே, மனசுக்கு இல்லை” போன்ற கருத்துகளை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.குளிர்ந்த பனிக்காலத்தில் பிறந்த இந்தச் சிறிய தருணம், அனைவருக்கும்  மகிழ்ச்சியளிக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement