• Jul 03 2026

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை மண்சரிவு அபாயத்திற்கு நிரந்தரத் தீர்வு!

shanu / Jul 3rd 2026, 9:33 pm
image

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த மண்சரிவு மற்றும் வீதி தாழிறக்கப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் வகையில், 41 மில்லியன் ரூபா செலவில் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக் காலங்களில் குயில்வத்தை பகுதியில் வீதி தாழிறக்கமும் மண்சரிவும் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி பல தடவைகள் மூடப்பட்டதுடன், அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் நீண்ட காலமாக ஒருவழிப் பாதையாகவே போக்குவரத்து இடம்பெற்று வந்தது.


இதனால் தினமும் இந்த பிரதான வீதியை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பொது போக்குவரத்து சேவைகள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக மழைக் காலங்களில் உயிர் அச்சத்துடனேயே மக்கள் இந்தப் பகுதியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.


இந்த நிலைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், மண்சரிவு அபாய நிலை குறைப்பு செயல்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகமும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இத்திட்டத்திற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் இலங்கை அரசும் நிதி ஒதுக்கியுள்ளதுடன், மொத்தம் 41 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கடந்த 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ், மலைச்சரிவை உறுதிப்படுத்தும் நவீன பொறியியல் தொழில்நுட்பமான சாயில் நெய்லிங் (ளுழடை யேடைiபெ) மற்றும் காபியன் (புயடிழைn) தாங்குச் சுவர் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


சரிவின் உட்பகுதியில் எஃகு கம்பிகள் ஆழமாக பொருத்தப்பட்டு மண்ணின் நிலைத்தன்மை அதிகரிக்கப்படுவதுடன், அடிப்பகுதியில் கற்களால் நிரப்பப்பட்ட காபியன் தாங்குச் சுவர்கள் அமைக்கப்பட்டு மண் சரிவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் வடிகால் வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் நீண்ட காலமாக நிலவி வந்த மண்சரிவு அபாயம் கணிசமாகக் குறைவடையும் என்றும், இருவழிப் போக்குவரத்து வழமைக்குத் திரும்புவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் சூழல் உருவாகும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


மத்திய மலைநாட்டு மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்த இந்தத் திட்டம், எதிர்காலத்தில் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளை குறைக்கும் முக்கியமான உள்கட்டமைப்பு முதலீடாகவும் கருதப்படுகிறது. 


மேலும், நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகவும் இந்தத் திட்டம் பாராட்டப்படுகிறது.

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை மண்சரிவு அபாயத்திற்கு நிரந்தரத் தீர்வு ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த மண்சரிவு மற்றும் வீதி தாழிறக்கப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் வகையில், 41 மில்லியன் ரூபா செலவில் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக் காலங்களில் குயில்வத்தை பகுதியில் வீதி தாழிறக்கமும் மண்சரிவும் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி பல தடவைகள் மூடப்பட்டதுடன், அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் நீண்ட காலமாக ஒருவழிப் பாதையாகவே போக்குவரத்து இடம்பெற்று வந்தது.இதனால் தினமும் இந்த பிரதான வீதியை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பொது போக்குவரத்து சேவைகள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக மழைக் காலங்களில் உயிர் அச்சத்துடனேயே மக்கள் இந்தப் பகுதியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.இந்த நிலைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், மண்சரிவு அபாய நிலை குறைப்பு செயல்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகமும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.இத்திட்டத்திற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் இலங்கை அரசும் நிதி ஒதுக்கியுள்ளதுடன், மொத்தம் 41 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், மலைச்சரிவை உறுதிப்படுத்தும் நவீன பொறியியல் தொழில்நுட்பமான சாயில் நெய்லிங் (ளுழடை யேடைiபெ) மற்றும் காபியன் (புயடிழைn) தாங்குச் சுவர் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.சரிவின் உட்பகுதியில் எஃகு கம்பிகள் ஆழமாக பொருத்தப்பட்டு மண்ணின் நிலைத்தன்மை அதிகரிக்கப்படுவதுடன், அடிப்பகுதியில் கற்களால் நிரப்பப்பட்ட காபியன் தாங்குச் சுவர்கள் அமைக்கப்பட்டு மண் சரிவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் வடிகால் வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் நீண்ட காலமாக நிலவி வந்த மண்சரிவு அபாயம் கணிசமாகக் குறைவடையும் என்றும், இருவழிப் போக்குவரத்து வழமைக்குத் திரும்புவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் சூழல் உருவாகும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.மத்திய மலைநாட்டு மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்த இந்தத் திட்டம், எதிர்காலத்தில் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளை குறைக்கும் முக்கியமான உள்கட்டமைப்பு முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும், நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகவும் இந்தத் திட்டம் பாராட்டப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement