• Oct 18 2026

வீடுகள் மீது உருண்டு விழுந்த மண்மேடு; முச்சக்கரவண்டியும் சேதம் – ஹப்புத்தளையில் பதற்றம்!

Chithra / Oct 18th 2026, 12:09 pm
image


ஹப்புத்தளை நகரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


இந்த மண்சரிவு சம்பவத்தினால் இரு வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 


இதேவேளை, ஹப்புத்தளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையினால் பிரதான வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


மேலும், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது கற்கள் உருண்டு விழுந்ததில் குறித்த முச்சக்கரவண்டியும் சேதமடைந்துள்ளது.


தொடரும் பலத்த மழையினால் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், மலைப்பாங்கான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வீடுகள் மீது உருண்டு விழுந்த மண்மேடு; முச்சக்கரவண்டியும் சேதம் – ஹப்புத்தளையில் பதற்றம் ஹப்புத்தளை நகரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.இந்த மண்சரிவு சம்பவத்தினால் இரு வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஹப்புத்தளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையினால் பிரதான வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது கற்கள் உருண்டு விழுந்ததில் குறித்த முச்சக்கரவண்டியும் சேதமடைந்துள்ளது.தொடரும் பலத்த மழையினால் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், மலைப்பாங்கான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement