மாடுகளை ஏற்றிச் செல்வது போல பயணிகளை அடுக்கடுக்காக நெருக்கிக்கொண்டு தனியார் பேருந்து பயணித்துள்ளது.
யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் இந்த பயங்கர சம்பவம் பதிவாகியுள்ளது. பலாலி வீதியால் தனியார் பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.
குறித்த தனியார் பேருந்தில் இருக்கைகளுக்கு மேல் நிற்க முடியாத அளவிற்குப் பயணிகள் காணப்பட்டுள்ளனர்.
பயணிகள் நிற்க முடியாமல் மூச்சுமுட்ட ஏற்றிச் சென்றும் பின்னர் மீண்டும் மீண்டும் மாடுகளை வரிசையாக கொண்டு செல்வது போல பயணிகளை மேலும் மேலும் பேருந்தில் ஏற்றிக் கொண்டு குறித்த தனியார் பேருந்து பயணித்துள்ளது.
இருக்கைகளுக்கு மேல் ஏற்றிச் சென்றாலே ஆபத்தாகக் கருதப்படும் வேளையில் இவ்வாறு பயணிகளை மூச்சுமுட்ட ஏற்றிச்சென்றுள்ளனர்.
இவ்வாறு செல்லும் போது பேருந்து பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு ஆபத்தான நிலையிலும் குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாடுகளை ஏற்றுவது போன்று பயணிகளை ஏற்றிய பேருந்து; பலாலி வீதியில் தள்ளாடி செல்லும் பயங்கர காட்சி மாடுகளை ஏற்றிச் செல்வது போல பயணிகளை அடுக்கடுக்காக நெருக்கிக்கொண்டு தனியார் பேருந்து பயணித்துள்ளது. யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் இந்த பயங்கர சம்பவம் பதிவாகியுள்ளது. பலாலி வீதியால் தனியார் பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. குறித்த தனியார் பேருந்தில் இருக்கைகளுக்கு மேல் நிற்க முடியாத அளவிற்குப் பயணிகள் காணப்பட்டுள்ளனர். பயணிகள் நிற்க முடியாமல் மூச்சுமுட்ட ஏற்றிச் சென்றும் பின்னர் மீண்டும் மீண்டும் மாடுகளை வரிசையாக கொண்டு செல்வது போல பயணிகளை மேலும் மேலும் பேருந்தில் ஏற்றிக் கொண்டு குறித்த தனியார் பேருந்து பயணித்துள்ளது. இருக்கைகளுக்கு மேல் ஏற்றிச் சென்றாலே ஆபத்தாகக் கருதப்படும் வேளையில் இவ்வாறு பயணிகளை மூச்சுமுட்ட ஏற்றிச்சென்றுள்ளனர். இவ்வாறு செல்லும் போது பேருந்து பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆபத்தான நிலையிலும் குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.