• Apr 22 2026

புகைமண்டலமான புறக்கோட்டை வர்த்தக நிலையம் ; 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது!

shanu / Sep 21st 2025, 9:51 pm
image

கொழும்பு - புறக்கோட்டை வர்த்தக நிலையம் புகைமண்டலமாகியதையடுத்து சுமார் 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது


புறக்கோட்டை முதல் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று (20) திடீரென  பெரும் தீப்பரவல் ஏற்பட்டது. 


அதனையடுத்து தீயணைப்புப் பிரிவின் 12 வாகனங்கள் பணியில் அமர்த்தப்பட்டது. எனினும் தீ கட்டுக்குள் வராததால் பின்னர் விமானப்படையின் ஹெலிகொப்டர் ஒன்றும் தீயை அணைக்க விரைந்து சென்றது. 


அவ்வாறு இருந்தும் புறக்கோட்டை முழுவதும் புகைமண்டலமாகயது. பின்னர் தீயணைப்பு  வீரர்கள் கிட்டத்தட்ட 12 மணி நேரம் போராடியதையடுத்தே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 


மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீ, மாலை 4 மணியளவில் மின்சாதனங்கள் மற்றும் மொபைல் போன்களை விற்பனை செய்யும் கடையின் நான்காவது மாடியில் தொடங்கி, பின்னர் அருகிலுள்ள கட்டிடத்திற்கு பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.



விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, அரசு ஆய்வாளர் மற்றும் நீதிபதி இன்று அந்த இடத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகைமண்டலமான புறக்கோட்டை வர்த்தக நிலையம் ; 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது கொழும்பு - புறக்கோட்டை வர்த்தக நிலையம் புகைமண்டலமாகியதையடுத்து சுமார் 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுபுறக்கோட்டை முதல் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று (20) திடீரென  பெரும் தீப்பரவல் ஏற்பட்டது. அதனையடுத்து தீயணைப்புப் பிரிவின் 12 வாகனங்கள் பணியில் அமர்த்தப்பட்டது. எனினும் தீ கட்டுக்குள் வராததால் பின்னர் விமானப்படையின் ஹெலிகொப்டர் ஒன்றும் தீயை அணைக்க விரைந்து சென்றது. அவ்வாறு இருந்தும் புறக்கோட்டை முழுவதும் புகைமண்டலமாகயது. பின்னர் தீயணைப்பு  வீரர்கள் கிட்டத்தட்ட 12 மணி நேரம் போராடியதையடுத்தே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீ, மாலை 4 மணியளவில் மின்சாதனங்கள் மற்றும் மொபைல் போன்களை விற்பனை செய்யும் கடையின் நான்காவது மாடியில் தொடங்கி, பின்னர் அருகிலுள்ள கட்டிடத்திற்கு பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, அரசு ஆய்வாளர் மற்றும் நீதிபதி இன்று அந்த இடத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement