• Jul 22 2026

டித்வா' அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு அவசர மீட்புத் திட்டம்

Chithra / Jul 22nd 2026, 7:53 am
image


'டித்வா' அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்பவும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை வழமையான நிலைக்கு கொண்டுவரவும் விசேட அவசர நிவாரணத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக அரசாங்கம் ஏற்கனவே வழங்கி வரும் நஷ்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த அவசர மீட்புத் திட்டத்திற்கான அனைத்து ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், கள மட்டத்தில் திட்டத்தை விரைவாக அமல்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


விலங்கு தீவனம் வழங்குதல், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், விலங்கு நலன் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீளமைத்தல், உணவு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாட்டின் மூலம் உயர்தர பால் பசுக்களை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.


இந்த திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்துவதுடன், உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

டித்வா' அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு அவசர மீட்புத் திட்டம் 'டித்வா' அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்பவும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை வழமையான நிலைக்கு கொண்டுவரவும் விசேட அவசர நிவாரணத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக அரசாங்கம் ஏற்கனவே வழங்கி வரும் நஷ்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த அவசர மீட்புத் திட்டத்திற்கான அனைத்து ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், கள மட்டத்தில் திட்டத்தை விரைவாக அமல்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.விலங்கு தீவனம் வழங்குதல், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், விலங்கு நலன் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீளமைத்தல், உணவு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாட்டின் மூலம் உயர்தர பால் பசுக்களை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.இந்த திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்துவதுடன், உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement