சீனாவில் ராட்சத கரப்பான் பூச்சி ஒன்று முட்டைப் பலகாரத்தின் மீது அமர்ந்திருப்பது போன்ற தோற்றமளிக்கும் வினோத உணவு, சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ்’ என அழைக்கப்படும் இந்தப் பலகாரம், சீனாவின் குவாங்டாங் மாகாணம், ஷுண்டே நகரிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு கரப்பான் பூச்சிகளைப் போல அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்தாலும், இவை உண்மையான கரப்பான் பூச்சிகள் அல்ல. ‘டைவிங் பீட்டில்ஸ்’ எனப்படும் நீர்வாழ் வண்டுகளே இந்தப் பலகாரத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் இந்த வண்டுகள் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த உணவைத் தயாரிப்பது குறித்துப் பேசிய உணவக உரிமையாளர், முதலில் வண்டுகளின், பின்னர் அவற்றின் இறக்கைகள் உடையாத வகையில் எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, இனிப்புச் சுவை கொண்ட முட்டைப் பலகாரத்தின் மீது உப்புச் சுவை கொண்ட இந்த வண்டுகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த வினோத உணவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. இருப்பினும், அதன் சுவையை அனுபவிப்பதற்காக அருகிலுள்ள நகரங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் தினமும் உணவகத்திற்கு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு அருவருப்பாகத் தோன்றும் இந்தப் பலகாரம், உண்மையில் சுவையில் எப்படி இருக்கும் என்பதே தற்போது இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.
சீனாவில் வைரலாகும் வினோதப் பலகாரம் சீனாவில் ராட்சத கரப்பான் பூச்சி ஒன்று முட்டைப் பலகாரத்தின் மீது அமர்ந்திருப்பது போன்ற தோற்றமளிக்கும் வினோத உணவு, சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ்’ என அழைக்கப்படும் இந்தப் பலகாரம், சீனாவின் குவாங்டாங் மாகாணம், ஷுண்டே நகரிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு கரப்பான் பூச்சிகளைப் போல அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்தாலும், இவை உண்மையான கரப்பான் பூச்சிகள் அல்ல. ‘டைவிங் பீட்டில்ஸ்’ எனப்படும் நீர்வாழ் வண்டுகளே இந்தப் பலகாரத்தில் பயன்படுத்தப்படுகின்றன.சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் இந்த வண்டுகள் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.இந்த உணவைத் தயாரிப்பது குறித்துப் பேசிய உணவக உரிமையாளர், முதலில் வண்டுகளின், பின்னர் அவற்றின் இறக்கைகள் உடையாத வகையில் எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.அதன்பிறகு, இனிப்புச் சுவை கொண்ட முட்டைப் பலகாரத்தின் மீது உப்புச் சுவை கொண்ட இந்த வண்டுகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.இந்த வினோத உணவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. இருப்பினும், அதன் சுவையை அனுபவிப்பதற்காக அருகிலுள்ள நகரங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் தினமும் உணவகத்திற்கு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.பார்ப்பதற்கு அருவருப்பாகத் தோன்றும் இந்தப் பலகாரம், உண்மையில் சுவையில் எப்படி இருக்கும் என்பதே தற்போது இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.