புறக்கோட்டைப் பகுதியில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட விசேட சோதனையில் 801 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனைகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், குடிநீரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரம் பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் போத்தல்களில் SLS உற்பத்தி சான்றிதழ் இலச்சினையும், இறக்குமதி செய்யப்படும் போத்தல்களில் உரிய SLSI பரிசோதனை மற்றும் விற்பனை அனுமதியும் இருக்க வேண்டும்.
எனவே, போத்தல்களை கொள்வனவு செய்யும் போது தரநிலைகள் மற்றும் சட்டத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போத்தல்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில்,
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்களை 1977 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும்.
புறக்கோட்டையில் சிக்கிய 801 போத்தல்கள் - நீதிமன்றம் செல்லும் அதிகாரிகள் புறக்கோட்டைப் பகுதியில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட விசேட சோதனையில் 801 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனைகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.இதற்கிடையில், குடிநீரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரம் பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் போத்தல்களில் SLS உற்பத்தி சான்றிதழ் இலச்சினையும், இறக்குமதி செய்யப்படும் போத்தல்களில் உரிய SLSI பரிசோதனை மற்றும் விற்பனை அனுமதியும் இருக்க வேண்டும்.எனவே, போத்தல்களை கொள்வனவு செய்யும் போது தரநிலைகள் மற்றும் சட்டத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட போத்தல்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்களை 1977 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும்.