• Sep 28 2026

தெற்கு லெபனானில் மீண்டும் தாக்குதல்-பதற்றம் மீண்டும் அதிகரிக்குமா?

Ziya / Sep 28th 2026, 9:36 am
image

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் மற்றும் பிராந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


நபதியே அல்-ஃபவ்கா, கஃபர் திப்னிட், மய்ஃபதூன் உள்ளிட்ட பல பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், சில இடங்களில் பீரங்கி மற்றும் கனரக துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மய்ஃபதூன் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு வீடு முற்றிலும் அழிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, தெற்கு லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லாவின் நிலைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் இராணுவத்தின் கூற்றுப்படி, அதன் படையினரை நோக்கி வெடிபொருள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 


அந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் தங்கள் வீரர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


அதேவேளை, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே கடந்த ஜூன் மாதம் அமெரிக்க மத்தியஸ்தத்தில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் அமலில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், தெற்கு லெபனானில் தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவது அந்த ஏற்பாட்டின் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதனால் தெற்கு லெபனானில் அடுத்த கட்டமாக பதற்றம் மேலும் அதிகரிக்குமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது

தெற்கு லெபனானில் மீண்டும் தாக்குதல்-பதற்றம் மீண்டும் அதிகரிக்குமா தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் மற்றும் பிராந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.நபதியே அல்-ஃபவ்கா, கஃபர் திப்னிட், மய்ஃபதூன் உள்ளிட்ட பல பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், சில இடங்களில் பீரங்கி மற்றும் கனரக துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மய்ஃபதூன் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு வீடு முற்றிலும் அழிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, தெற்கு லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லாவின் நிலைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் இராணுவத்தின் கூற்றுப்படி, அதன் படையினரை நோக்கி வெடிபொருள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் தங்கள் வீரர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.அதேவேளை, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே கடந்த ஜூன் மாதம் அமெரிக்க மத்தியஸ்தத்தில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் அமலில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், தெற்கு லெபனானில் தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவது அந்த ஏற்பாட்டின் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.இதனால் தெற்கு லெபனானில் அடுத்த கட்டமாக பதற்றம் மேலும் அதிகரிக்குமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Advertisement

Advertisement

Advertisement