• Jun 29 2026

நீர்கொழும்பில் 625 கிலோ பீடி இலைகள் மீட்பு!

shanu / Jun 29th 2026, 3:05 pm
image

நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான பீடி இலைகள் நேற்று (28) கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலும், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.


கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


நீர்கொழும்பு களப்புப் பகுதியில் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த களப்புப் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் கெளனியால் பரிசோதிக்கப்பட்டது. 


இதன்போது, 17 உர பைகளில் பொதிச் செய்யப்பட்ட 625 கிலோகிராம் பீடி இலைகள் இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன், குறித்த பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்.


மேலும், பீடி இலைகள் அடங்கிய உர மூடைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதில் பயணித்த நபர் ஒருவரையும் கைது செய்தனர்.


இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

நீர்கொழும்பில் 625 கிலோ பீடி இலைகள் மீட்பு நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான பீடி இலைகள் நேற்று (28) கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு களப்புப் பகுதியில் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த களப்புப் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் கெளனியால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது, 17 உர பைகளில் பொதிச் செய்யப்பட்ட 625 கிலோகிராம் பீடி இலைகள் இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன், குறித்த பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்.மேலும், பீடி இலைகள் அடங்கிய உர மூடைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதில் பயணித்த நபர் ஒருவரையும் கைது செய்தனர்.இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement