• Jul 17 2026

மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Chithra / Jul 16th 2026, 8:42 pm
image


மூதூர் - மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


மூதூர் - மணற்சேனை இந்து மயான முன்றலில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலை குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி ஒருநிமிட மௌன பிரார்த்தனை இடம்பெற்றது.


இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி, மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


1986.07.16 அன்று கிராமத்திற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட இவ் தாக்குதல் சம்பவத்தில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் - மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.மூதூர் - மணற்சேனை இந்து மயான முன்றலில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலை குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி ஒருநிமிட மௌன பிரார்த்தனை இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி, மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.1986.07.16 அன்று கிராமத்திற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட இவ் தாக்குதல் சம்பவத்தில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement