நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் இன்று (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக கூறினார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கங்களும், பதுளை மாவட்டத்தில் அம்பேவெல நீர்த்தேக்கமும் வான் பாய்கின்றன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்களும் நிரம்பியுள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மெதியாய, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களும் வான் பாய்ந்து வருகின்றன.
அதேபோல் கண்டி மாவட்டத்தின் நாலந்தா மற்றும் வாமடில்ல நீர்த்தேக்கங்கள், மொனராகலை மாவட்டத்தின் ஹதபானகல மற்றும் அலிகொடஆர நீர்த்தேக்கங்கள், புத்தளம் மாவட்டத்தின் இகிணிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள், மன்னார் மாவட்டத்தின் யோத வாவியும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,600 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது.
லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 4 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,740 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு விடப்படுகின்றது.
வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 3 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 700 கன அடி நீர் மாணிக்க கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அலிகொடஆர நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 680 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்படுகின்றது.
யாண் ஓயா நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு கதவு 6 அங்குலமும், ஏனைய இரண்டு கதவுகள் தலா 4 அங்குலமும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தப்போவ நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வான்பாயும் 21 பிரதான நீர்த்தேக்கங்கள் - பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் இன்று (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக கூறினார்.அநுராதபுரம் மாவட்டத்தில் ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கங்களும், பதுளை மாவட்டத்தில் அம்பேவெல நீர்த்தேக்கமும் வான் பாய்கின்றன.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்களும் நிரம்பியுள்ளன.குருநாகல் மாவட்டத்தில் அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மெதியாய, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களும் வான் பாய்ந்து வருகின்றன.அதேபோல் கண்டி மாவட்டத்தின் நாலந்தா மற்றும் வாமடில்ல நீர்த்தேக்கங்கள், மொனராகலை மாவட்டத்தின் ஹதபானகல மற்றும் அலிகொடஆர நீர்த்தேக்கங்கள், புத்தளம் மாவட்டத்தின் இகிணிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள், மன்னார் மாவட்டத்தின் யோத வாவியும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,600 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது.லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 4 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,740 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு விடப்படுகின்றது.வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 3 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 700 கன அடி நீர் மாணிக்க கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், அலிகொடஆர நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 680 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்படுகின்றது.யாண் ஓயா நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு கதவு 6 அங்குலமும், ஏனைய இரண்டு கதவுகள் தலா 4 அங்குலமும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தப்போவ நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.