• Aug 22 2026

உடப்பு பகுதியில் கடலரிப்பை தடுக்க கருங்கல் அமைக்கும் பணி ஆரம்பம்

Chithra / Aug 22nd 2026, 12:13 pm
image


புத்தளம், உடப்பு பகுதியில் வேகமாக ஏற்பட்டுவரும் கடலரிப்பைத் தடுக்கும் நோக்கில் கருங்கல் அமைக்கும் வேலைத்திட்டம் இன்று (22) சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


அண்மைக்காலமாக தென்மேற்கு மற்றும் வடமேற்கு பருவக்காற்றின் தாக்கத்தால் உடப்பு பகுதியில் கடல் நிலப்பரப்பை ஆக்கிரமித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதன் காரணமாக காளியம்மன் ஆலயத்தின் பின்பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல வீடுகளும் கடலுக்குள் சென்று அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், கடலரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் உடப்பு இந்து ஆலய பரிபாலன சபை மற்றும் உடப்பு ஊரவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடற்றொழில் அமைச்சு மற்றும் கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.


சுமார் 200 மீற்றர் நீளத்திற்கு கருங்கற்கள் அமைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

உடப்பு பகுதியில் கடலரிப்பை தடுக்க கருங்கல் அமைக்கும் பணி ஆரம்பம் புத்தளம், உடப்பு பகுதியில் வேகமாக ஏற்பட்டுவரும் கடலரிப்பைத் தடுக்கும் நோக்கில் கருங்கல் அமைக்கும் வேலைத்திட்டம் இன்று (22) சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.அண்மைக்காலமாக தென்மேற்கு மற்றும் வடமேற்கு பருவக்காற்றின் தாக்கத்தால் உடப்பு பகுதியில் கடல் நிலப்பரப்பை ஆக்கிரமித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக காளியம்மன் ஆலயத்தின் பின்பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல வீடுகளும் கடலுக்குள் சென்று அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், கடலரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் உடப்பு இந்து ஆலய பரிபாலன சபை மற்றும் உடப்பு ஊரவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடற்றொழில் அமைச்சு மற்றும் கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.சுமார் 200 மீற்றர் நீளத்திற்கு கருங்கற்கள் அமைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement