தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கு அந்நாடு முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று (27) அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அவசியம் குறித்து கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, கனடா இந்த விடயத்தில் முன்னுதாரணமாகச் செயற்பட்டு தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதுடன், ஏனைய நாடுகளும் இதேபோன்ற தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது, யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தரத்திலான தடயவியல் தொழில்நுட்ப உதவிகளையும் நவீன ஆய்வு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதற்கு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு அவசியமானது எனச் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதிப்பதற்குத் தேவையான நவீன தடயவியல் கருவிகளையும் சர்வதேச நிபுணத்துவ உதவிகளையும் கனடா பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவது தொடர்பாகத் தமது கட்சித் தலைமையுடன் ஆலோசித்து சாதகமான முடிவை எடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் கல்கரி ஹெரிடேஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கைத் தமிழர் விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற உபகுழுவின் உபதலைவருமான சுவலோய் மஜும்தார் (Shuvaloy Majumdar MP), ஒன்ராறியோ மாகாணத்தின் அரோரா–ஓக் ரிட்ஜஸ்–ரிச்மண்ட் ஹில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெகாகிஸ் (Costas Menegakis MP) மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வெளித்தொடர்புப் பிரிவைச் சேர்ந்த டரினா ஒஸ்ட்ரோவ்ஸ்கா (Daryna Ostrovska) ஆகியோர் கலந்துகொண்டனர்.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குமா கனடாவில் சிறீதரனுக்கு வழங்கப்பட்ட முக்கிய உறுதிமொழி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கு அந்நாடு முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று (27) அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அவசியம் குறித்து கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.குறிப்பாக, கனடா இந்த விடயத்தில் முன்னுதாரணமாகச் செயற்பட்டு தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதுடன், ஏனைய நாடுகளும் இதேபோன்ற தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இதன்போது, யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தரத்திலான தடயவியல் தொழில்நுட்ப உதவிகளையும் நவீன ஆய்வு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதற்கு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பு அவசியமானது எனச் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதிப்பதற்குத் தேவையான நவீன தடயவியல் கருவிகளையும் சர்வதேச நிபுணத்துவ உதவிகளையும் கனடா பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவது தொடர்பாகத் தமது கட்சித் தலைமையுடன் ஆலோசித்து சாதகமான முடிவை எடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சந்திப்பில் கல்கரி ஹெரிடேஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கைத் தமிழர் விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற உபகுழுவின் உபதலைவருமான சுவலோய் மஜும்தார் (Shuvaloy Majumdar MP), ஒன்ராறியோ மாகாணத்தின் அரோரா–ஓக் ரிட்ஜஸ்–ரிச்மண்ட் ஹில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெகாகிஸ் (Costas Menegakis MP) மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வெளித்தொடர்புப் பிரிவைச் சேர்ந்த டரினா ஒஸ்ட்ரோவ்ஸ்கா (Daryna Ostrovska) ஆகியோர் கலந்துகொண்டனர்.