• Jul 14 2026

நீர்கொழும்பு சிறை மோதல்; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

Chithra / Jul 14th 2026, 9:44 am
image


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.


நேற்றுமுன்தினம் (13) மற்றும் நேற்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு அதிகாரிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதன் மூலம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.


ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஏற்கனவே 21 சிறைக்கைதிகள் உயிரிழந்திருந்த நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது.


மேலும், இந்த மோதலில் காயமடைந்த சில சிறைக்கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறை மோதல்; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.நேற்றுமுன்தினம் (13) மற்றும் நேற்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு அதிகாரிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன் மூலம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஏற்கனவே 21 சிறைக்கைதிகள் உயிரிழந்திருந்த நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது.மேலும், இந்த மோதலில் காயமடைந்த சில சிறைக்கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement