• May 23 2026

வெள்ளை வாய்க்கால் மழை நீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு – நன்றி தெரிவித்த கிராம மக்கள்

Aathira / May 23rd 2026, 11:47 am
image

யாழ்ப்பாணம் – சகாயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளை வாய்க்கால் சுமார் 89 ஆண்டுகளாக திருத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது அதனை சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக எமது செய்தி பிரிவு வெளியிட்ட தகவலின் அடிப்படையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆளுநரின் அறிவுறுத்தலின் கீழ் உள்ளூர் ஆட்சி திணைக்களம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளனர்.

பிரதேசத்தில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் வகையில் வாய்க்கால் வழியாக நீர் கடலுக்குச் செல்லும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வயல்வெளிகள் மற்றும் குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மழை தொடர்ந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியதுடன், அவசர உதவிக்காக தொடர்ந்து தயார் நிலையில் இருப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஆளுநர் செயலகம், உள்ளூர் ஆட்சி திணைக்களம் மற்றும் பிரதேச ஊழியர்களுக்கு கிராம மக்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


வெள்ளை வாய்க்கால் மழை நீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு – நன்றி தெரிவித்த கிராம மக்கள் யாழ்ப்பாணம் – சகாயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளை வாய்க்கால் சுமார் 89 ஆண்டுகளாக திருத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது அதனை சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.குறித்த கிராமத்தில் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக எமது செய்தி பிரிவு வெளியிட்ட தகவலின் அடிப்படையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஆளுநரின் அறிவுறுத்தலின் கீழ் உள்ளூர் ஆட்சி திணைக்களம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளனர்.பிரதேசத்தில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் வகையில் வாய்க்கால் வழியாக நீர் கடலுக்குச் செல்லும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வயல்வெளிகள் மற்றும் குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மழை தொடர்ந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியதுடன், அவசர உதவிக்காக தொடர்ந்து தயார் நிலையில் இருப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.இதற்கிடையில், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஆளுநர் செயலகம், உள்ளூர் ஆட்சி திணைக்களம் மற்றும் பிரதேச ஊழியர்களுக்கு கிராம மக்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement