தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்குரிய விசேட பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகன அணிவகுப்பு இன்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நேற்று இரவு தனது நீலாங்கரை இல்லத்துக்குத் திரும்பியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைத் திரட்ட முடியாமல் தமிழக வெற்றிக் கழகம் தவித்து வருகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பெரும்பான்மையான ஆசனங்களை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு இரண்டு நாட்களாக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், நேற்று இரண்டு தடவை தமிழக ஆளுநரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய போதிலும், ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில் அவருக்கான பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.
அதன்படி, அவரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 4 வாகனங்களுடன், 50 பொலிஸ் அதிகாரிகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பே கென்வாய் வாகனங்கள் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆட்சியமைப்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் இன்றி அவர் இல்லம் வந்தடைந்தமை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திமுகவுடனான 11 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, நிபந்தனைகளுடன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்கக் கோரி கடிதம் அளித்துள்ளார்.
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் கேட்பதாகத் தகவல் வெளியாகி உள்ளதால், பதவியேற்பு நிகழ்வில் தற்காலிகத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆளுநரின் இந்த நிலைப்பாட்டுக்குக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமேயன்றி ஆளுநர் மாளிகை அல்ல என்றும், தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய்யை மக்கள் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், மக்கள் தீர்ப்புக்குக் குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாரதீய ஜனதா கட்சி ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும் என்றும், தவெக தலைவர் விஜய்யை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் இல்லாமல் சென்ற விஜய் பதவியேற்பதில் தொடரும் சிக்கல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்குரிய விசேட பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகன அணிவகுப்பு இன்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நேற்று இரவு தனது நீலாங்கரை இல்லத்துக்குத் திரும்பியுள்ளார்.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைத் திரட்ட முடியாமல் தமிழக வெற்றிக் கழகம் தவித்து வருகிறது.தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பெரும்பான்மையான ஆசனங்களை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு இரண்டு நாட்களாக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.இந்தநிலையில், நேற்று இரண்டு தடவை தமிழக ஆளுநரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய போதிலும், ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில் அவருக்கான பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.அதன்படி, அவரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 4 வாகனங்களுடன், 50 பொலிஸ் அதிகாரிகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்று பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பே கென்வாய் வாகனங்கள் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆட்சியமைப்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் இன்றி அவர் இல்லம் வந்தடைந்தமை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, திமுகவுடனான 11 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, நிபந்தனைகளுடன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.இந்நிலையில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்கக் கோரி கடிதம் அளித்துள்ளார்.விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் கேட்பதாகத் தகவல் வெளியாகி உள்ளதால், பதவியேற்பு நிகழ்வில் தற்காலிகத் தாமதம் ஏற்பட்டுள்ளது.ஆளுநரின் இந்த நிலைப்பாட்டுக்குக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமேயன்றி ஆளுநர் மாளிகை அல்ல என்றும், தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய்யை மக்கள் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், மக்கள் தீர்ப்புக்குக் குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பாரதீய ஜனதா கட்சி ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும் என்றும், தவெக தலைவர் விஜய்யை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.