• Jun 03 2026

இளைஞர்களை மோதிக் கொன்ற வாகனம் - வவுனியாவில் கோர விபத்து

Chithra / Jun 3rd 2026, 11:00 am
image

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் (பெரியகுளம்) A-9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


வவுனியா - யாழ்ப்பாணம் A-9 வீதியில் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகில் பாதசாரிகளாக நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, அதே திசையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று மோதித் தள்ளியுள்ளது.


மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவர்களின் உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் அதன் சாரதி தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


விபத்து நடந்த பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

இளைஞர்களை மோதிக் கொன்ற வாகனம் - வவுனியாவில் கோர விபத்து வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் (பெரியகுளம்) A-9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.வவுனியா - யாழ்ப்பாணம் A-9 வீதியில் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகில் பாதசாரிகளாக நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, அதே திசையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று மோதித் தள்ளியுள்ளது.மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களின் உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் அதன் சாரதி தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்து நடந்த பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement