• Apr 29 2026

வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்: சிறுபோக சாகுபடி மற்றும் நீர் மேலாண்மை குறித்து விரிவான ஆராய்வு!

Ziya / Apr 29th 2026, 12:43 pm
image

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.


மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேலதிக மாவட்ட செயலாளர் என். கமலதாசன் , பிரதேச செயலாளர்கள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் மாவட்டத்தின் விவசாய நிலவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது


தற்போதைய சிறுபோக பருவத்திற்கான நெற்பயிர்ச் செய்கையின் முன்னேற்றங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.


பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் மற்றும் உர விநியோகத்தை வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


நெல் தவிர்ந்த ஏனைய மேட்டுநிலப் பயிர்கள் மற்றும் சிறுதானியச் செய்கைகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.


மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் துறை சார்ந்த நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.


வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்: சிறுபோக சாகுபடி மற்றும் நீர் மேலாண்மை குறித்து விரிவான ஆராய்வு வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேலதிக மாவட்ட செயலாளர் என். கமலதாசன் , பிரதேச செயலாளர்கள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் மாவட்டத்தின் விவசாய நிலவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுதற்போதைய சிறுபோக பருவத்திற்கான நெற்பயிர்ச் செய்கையின் முன்னேற்றங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் மற்றும் உர விநியோகத்தை வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.நெல் தவிர்ந்த ஏனைய மேட்டுநிலப் பயிர்கள் மற்றும் சிறுதானியச் செய்கைகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் துறை சார்ந்த நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement