• Apr 19 2026

ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்து: 4 வீரர்கள் உயிரிழப்பு!

Ziya / Mar 13th 2026, 5:12 pm
image

மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் போர்த்திறன் வாய்ந்த KC-135 வகை எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவலை அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த விமானம் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) என்ற ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, மார்ச் 12-ம் தேதி மதியம் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்தின் போது விமானத்தில் மொத்தம் 6 பணியாளர்கள் இருந்துள்ளனர். 

அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து CENTCOM வெளியிட்டுள்ள முக்கிய தகவல்படி,

இந்த விமானம் எதிரிகளின் தாக்குதலால் (Hostile fire) வீழ்த்தப்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

எஞ்சிய இருவரின் நிலை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியுள்ளதால், அவர்களின் அடையாளங்கள் இன்னும் 24 மணி நேரத்திற்கு வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

KC-135 ஸ்ட்ராடோடேங்கர் (Stratotanker) விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதா அல்லது வானிலை மாற்றமா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

வான்வழி எரிபொருள் நிரப்பும் பணிகளில் இந்த வகை விமானங்கள் மிக முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்து: 4 வீரர்கள் உயிரிழப்பு மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் போர்த்திறன் வாய்ந்த KC-135 வகை எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்தத் தகவலை அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.குறித்த விமானம் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) என்ற ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, மார்ச் 12-ம் தேதி மதியம் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது விமானத்தில் மொத்தம் 6 பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து CENTCOM வெளியிட்டுள்ள முக்கிய தகவல்படி,இந்த விமானம் எதிரிகளின் தாக்குதலால் (Hostile fire) வீழ்த்தப்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எஞ்சிய இருவரின் நிலை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியுள்ளதால், அவர்களின் அடையாளங்கள் இன்னும் 24 மணி நேரத்திற்கு வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.KC-135 ஸ்ட்ராடோடேங்கர் (Stratotanker) விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதா அல்லது வானிலை மாற்றமா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வான்வழி எரிபொருள் நிரப்பும் பணிகளில் இந்த வகை விமானங்கள் மிக முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement