• May 19 2026

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் அவசர சந்திப்பு

Chithra / Dec 30th 2025, 8:21 pm
image

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான் ருவன் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம் மற்றும் நவீன் திசாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தாய்நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிப்பதற்கும், தேசிய இலக்குகளை வினைத்திறனான முறையில் அடைந்துகொள்வதற்குமான புதிய கொள்கைத் திட்டங்களை வகுப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சஜித் பிரேமதாச தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் ஆக்கபூர்வமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்த இக்கலந்துரையாடலின் போது, நாட்டின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய புத்தாக்கமான கொள்கைப் பரிந்துரைகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் அவசர சந்திப்பு  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான் ருவன் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம் மற்றும் நவீன் திசாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.தாய்நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிப்பதற்கும், தேசிய இலக்குகளை வினைத்திறனான முறையில் அடைந்துகொள்வதற்குமான புதிய கொள்கைத் திட்டங்களை வகுப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சஜித் பிரேமதாச தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.மிகவும் ஆக்கபூர்வமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்த இக்கலந்துரையாடலின் போது, நாட்டின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய புத்தாக்கமான கொள்கைப் பரிந்துரைகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement