• Apr 23 2026

2,000 லீற்றருக்கும் அதிக டீசலை பதுக்கிய இருவர் தம்பலகாமத்தில் கைது!

Chithra / Apr 3rd 2026, 12:12 pm
image

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவிலான டீசலை வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (02) மாலை மொல்லிப்பொத்தானை பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.


இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,430 லீற்றர் டீசல் மற்றும் 615 லீற்றர் டீசல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 2,045 லீற்றர் டீசல் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில் திருகோணமலை மற்றும் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 61 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.   

2,000 லீற்றருக்கும் அதிக டீசலை பதுக்கிய இருவர் தம்பலகாமத்தில் கைது திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவிலான டீசலை வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (02) மாலை மொல்லிப்பொத்தானை பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,430 லீற்றர் டீசல் மற்றும் 615 லீற்றர் டீசல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 2,045 லீற்றர் டீசல் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் திருகோணமலை மற்றும் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 61 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.   

Advertisement

Advertisement

Advertisement