முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து குறித்த இருவரும் ஒரு படகில் தொழிலுக்காகச் சென்றுள்ளனர்.
வழமையாக நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று அதிகாலைக்குள் அவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும்.
இருப்பினும், நீண்ட நேரமாகியும் படகும் மீனவர்களும் வராததால் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று மாலை வரை சக மீனவர்கள் நான்கு படகுகளில் கடலுக்குச் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். இருப்பினும், அவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும் அந்த தேடுதல் முயற்சி தோல்வியடைந்ததுடன், இன்றும் தேடுதல் பணிகளில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக கடற்படையினருக்கும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களை விரைவாகக் மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்; தேடும் பணிகள் தீவிரம் முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து குறித்த இருவரும் ஒரு படகில் தொழிலுக்காகச் சென்றுள்ளனர்.வழமையாக நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று அதிகாலைக்குள் அவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். இருப்பினும், நீண்ட நேரமாகியும் படகும் மீனவர்களும் வராததால் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.நேற்று மாலை வரை சக மீனவர்கள் நான்கு படகுகளில் கடலுக்குச் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். இருப்பினும், அவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.எவ்வாறாயினும் அந்த தேடுதல் முயற்சி தோல்வியடைந்ததுடன், இன்றும் தேடுதல் பணிகளில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இவ்விடயம் தொடர்பாக கடற்படையினருக்கும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களை விரைவாகக் மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.