முல்லைத்தீவு, கோம்பாவில் பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றாமல் வீட்டில் வளர்த்து வந்த நபருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் வீதியால் பயணிக்கும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோம்பாவில் பொது சுகாதாரப் பரிசோதகர், நாய்களின் உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாய்களின் உரிமையாளரைப் பிணையில் செல்ல பதில் நீதிபதி அனுமதித்துள்ளார்.
அத்துடன், அவரது வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து நாய்களுக்கும் விசர் நோய் தடுப்பூசியை ஏற்றி, அதற்கான தடுப்பூசி அட்டைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாய்களுக்கான விசர் நோய் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகச் சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, நாய்களை வளர்ப்போர் தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அல்லது பொது சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு நாய்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கிராமம் கிராமமாகச் சென்று வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பையும் விலங்குகளின் நலனையும் கருத்திற்கொண்டு, நாய் உரிமையாளர்கள் உரிய காலத்தில் தடுப்பூசிகளை ஏற்றுவதுடன், அவற்றைப் பொறுப்புடன் பராமரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் வளர்த்த நாய்களால் வந்த வினை – முல்லைத்தீவில் நீதிமன்றம் வரை சென்ற விவகாரம் முல்லைத்தீவு, கோம்பாவில் பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றாமல் வீட்டில் வளர்த்து வந்த நபருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் வீதியால் பயணிக்கும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோம்பாவில் பொது சுகாதாரப் பரிசோதகர், நாய்களின் உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாய்களின் உரிமையாளரைப் பிணையில் செல்ல பதில் நீதிபதி அனுமதித்துள்ளார்.அத்துடன், அவரது வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து நாய்களுக்கும் விசர் நோய் தடுப்பூசியை ஏற்றி, அதற்கான தடுப்பூசி அட்டைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதேவேளை, நாய்களுக்கான விசர் நோய் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகச் சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.எனவே, நாய்களை வளர்ப்போர் தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அல்லது பொது சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு நாய்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கிராமம் கிராமமாகச் சென்று வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.பொதுமக்களின் பாதுகாப்பையும் விலங்குகளின் நலனையும் கருத்திற்கொண்டு, நாய் உரிமையாளர்கள் உரிய காலத்தில் தடுப்பூசிகளை ஏற்றுவதுடன், அவற்றைப் பொறுப்புடன் பராமரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.