கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் போது ஆழிப்பேரலையினால் உயிரிழந்த 68 மாணவர்களுக்கு( 26)இன்று கள்ளப்பாடு பாடசாலையில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ம.சுரேஸ்தரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து உயிர்நீத்த மாணவர்களின் உறவினர்கள் பொதுச்சுடரினை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர்.
அத்துடன் உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக கள்ளப்பாடு பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபிக்கு மலர் தூவி தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும், உறவினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆழிப்பேரலையால் உயிரிழந்த கள்ளப்பாடு பாடசாலை மாணவர்களுக்கு அஞ்சலி கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் போது ஆழிப்பேரலையினால் உயிரிழந்த 68 மாணவர்களுக்கு( 26)இன்று கள்ளப்பாடு பாடசாலையில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.இதன் போது கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ம.சுரேஸ்தரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து உயிர்நீத்த மாணவர்களின் உறவினர்கள் பொதுச்சுடரினை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர்.அத்துடன் உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக கள்ளப்பாடு பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபிக்கு மலர் தூவி தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும், உறவினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.