மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் வாளியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீரில் மூழ்கி 2 வயது 8 மாத குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இன்று (01) காலை சுமார் 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எதிர்பாராத விதமாக குழந்தை தலைகீழாக வாளிக்குள் விழுந்து நீரில் மூழ்கியதாகவும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக உறவினர்கள் குழந்தையை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டார்.
இதனையடுத்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் இன்று மாலை 6 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் - மட்டக்களப்பில் சோகம் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் வாளியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீரில் மூழ்கி 2 வயது 8 மாத குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இன்று (01) காலை சுமார் 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது எதிர்பாராத விதமாக குழந்தை தலைகீழாக வாளிக்குள் விழுந்து நீரில் மூழ்கியதாகவும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.உடனடியாக உறவினர்கள் குழந்தையை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டார்.இதனையடுத்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் இன்று மாலை 6 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.