• May 20 2026

474 பேரை பலியெடுத்த அனர்த்தம்; 356 பேர் மாயம்! 95 வீதிகளுக்கு இன்னும் தடை

Chithra / Dec 3rd 2025, 12:15 pm
image


சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 356 பேர் காணாமல் போயுள்ளனர். 

 

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு வெளியிட்டுள்ளது. 


இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் (சுமார் 15 இலட்சத்து 86 ஆயிரத்து 329 பேர்) பாதிக்கப்பட்டுள்ளனர். 


இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,385 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 53,758 குடும்பங்களைச் சேர்ந்த 201,875 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


மேலும் 971 வீடுகள் முழுமையாகவும், 40,358 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வீதிகளில் இன்னும் 95 வீதிகள் தடைபட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது. 

 

இந்த வீதிகளை சுத்தம் செய்யும் பணிகள் அடுத்த சில நாட்களுக்குள் நிறைவடையும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார். 

 

அனர்த்த நிலைமை காரணமாக மொத்தம் 256 வீதிகள் பாதிக்கப்பட்டிருந்தன. மேலும் அனர்த்தம் காரணமாக 20 பாலங்களும் சேதமடைந்துள்ளது.


பொறியியல் குழுக்கள் சேதங்களைச் சரி செய்வதிலும் தடைகளை அகற்றுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

474 பேரை பலியெடுத்த அனர்த்தம்; 356 பேர் மாயம் 95 வீதிகளுக்கு இன்னும் தடை சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 356 பேர் காணாமல் போயுள்ளனர்.  நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு வெளியிட்டுள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் (சுமார் 15 இலட்சத்து 86 ஆயிரத்து 329 பேர்) பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,385 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 53,758 குடும்பங்களைச் சேர்ந்த 201,875 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 971 வீடுகள் முழுமையாகவும், 40,358 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வீதிகளில் இன்னும் 95 வீதிகள் தடைபட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது.  இந்த வீதிகளை சுத்தம் செய்யும் பணிகள் அடுத்த சில நாட்களுக்குள் நிறைவடையும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார்.  அனர்த்த நிலைமை காரணமாக மொத்தம் 256 வீதிகள் பாதிக்கப்பட்டிருந்தன. மேலும் அனர்த்தம் காரணமாக 20 பாலங்களும் சேதமடைந்துள்ளது.பொறியியல் குழுக்கள் சேதங்களைச் சரி செய்வதிலும் தடைகளை அகற்றுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement