தலவாக்கலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன சோதனை நடவடிக்கையின்போது, பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்ட 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்கள் இணைந்து தலவாக்கலை ஊடாக பயணித்த பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் மற்றும் லொறிகள் உள்ளிட்ட 40 வாகனங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது, வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன.
இதையடுத்து, குறித்த வாகனங்களின் வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டதுடன், அவை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டன.
விபத்துகளை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 4 தனியார் பேருந்துகள் மற்றும் 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் இவ்வாறு பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, வாகனங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வரை அவற்றை இயக்குவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் அதிரடி வாகன சோதனை: 28 வாகனங்கள் தற்காலிகமாக பயன்பாட்டில் இருந்து நீக்கம் தலவாக்கலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன சோதனை நடவடிக்கையின்போது, பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்ட 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்கள் இணைந்து தலவாக்கலை ஊடாக பயணித்த பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் மற்றும் லொறிகள் உள்ளிட்ட 40 வாகனங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தினர்.இதன்போது, வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, குறித்த வாகனங்களின் வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டதுடன், அவை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டன.விபத்துகளை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 4 தனியார் பேருந்துகள் மற்றும் 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் இவ்வாறு பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.அதேவேளை, வாகனங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வரை அவற்றை இயக்குவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.