இலங்கையில் வாய் மற்றும் அது சார்ந்த புற்றுநோய்களால் தினமும் மூவர் உயிரிழப்பதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் சியாம பன்னேஹேக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சுவையூட்டப்பட்ட பாக்கு சார்ந்த உற்பத்திகளைப் பயன்படுத்துவதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வாய் புற்றுநோய் மற்றும் அதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் வாய் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (13) பல் மருத்துவ பீடக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பல் மருத்துவப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியரும், வாய் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளருமான ருவன் ஜயசிங்க, அதிர்ச்சியளிக்கும் சம்பவமொன்றையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பாக்கு மெல்லும் பழக்கத்தினால் வாய் புற்றுநோய்க்கு ஆளான 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரைத் தாம் நேரில் சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 17 வயதுக்கும் குறைந்த மாணவர்கள்கூட வாய் புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனம் ஓட்டும்போது தூக்கம் வராமல் இருப்பதற்காக வெற்றிலை மற்றும் பாக்கு மெல்லும் பழக்கத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் பேராசிரியர் ருவன் ஜயசிங்க எச்சரித்துள்ளார்.
பாக்கு மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பயன்பாடு வாய் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் தினமும் மூவர் உயிரிழப்பு – பாடசாலை மாணவர்கள் தொடர்பில் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் இலங்கையில் வாய் மற்றும் அது சார்ந்த புற்றுநோய்களால் தினமும் மூவர் உயிரிழப்பதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் சியாம பன்னேஹேக தெரிவித்துள்ளார்.குறிப்பாக, சுவையூட்டப்பட்ட பாக்கு சார்ந்த உற்பத்திகளைப் பயன்படுத்துவதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வாய் புற்றுநோய் மற்றும் அதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் வாய் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (13) பல் மருத்துவ பீடக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பல் மருத்துவப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியரும், வாய் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளருமான ருவன் ஜயசிங்க, அதிர்ச்சியளிக்கும் சம்பவமொன்றையும் வெளிப்படுத்தியுள்ளார்.பாக்கு மெல்லும் பழக்கத்தினால் வாய் புற்றுநோய்க்கு ஆளான 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரைத் தாம் நேரில் சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், 17 வயதுக்கும் குறைந்த மாணவர்கள்கூட வாய் புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வாகனம் ஓட்டும்போது தூக்கம் வராமல் இருப்பதற்காக வெற்றிலை மற்றும் பாக்கு மெல்லும் பழக்கத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் பேராசிரியர் ருவன் ஜயசிங்க எச்சரித்துள்ளார்.பாக்கு மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பயன்பாடு வாய் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.