• Jun 14 2026

புங்குடுதீவு கடற்பகுதியில் மாயமான மூன்று மீனவர்கள் - தீவிர தேடுதலில் மீட்பு

Chithra / Jun 7th 2026, 1:50 pm
image


யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.


புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். 


அவர்களை தேடும் பணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. 


இந்நிலையில் கடற்தொழில் அமைச்சரின் பணிப்பின் பேரில் கடற்படையினர் தமது படகுகளில் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய கடற்பரப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடற்தொழிலாளர்களை கண்டு மீட்டுள்ளனர். 


மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை பாதுகாப்பாக குறிகட்டுவான் இறங்கு துறைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களது உறவினர்களிடம் கையளித்துள்ளனர். 


குறித்த மீட்பு நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


புங்குடுதீவு கடற்பகுதியில் மாயமான மூன்று மீனவர்கள் - தீவிர தேடுதலில் மீட்பு யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். அவர்களை தேடும் பணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடற்தொழில் அமைச்சரின் பணிப்பின் பேரில் கடற்படையினர் தமது படகுகளில் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய கடற்பரப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடற்தொழிலாளர்களை கண்டு மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை பாதுகாப்பாக குறிகட்டுவான் இறங்கு துறைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களது உறவினர்களிடம் கையளித்துள்ளனர். குறித்த மீட்பு நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement