• Jun 05 2026

கற்கோவளம் பகுதியில் மீனவர்களுக்கு உயிர்காக்கும் அங்கிகள்..!

shanu / Jun 5th 2026, 9:49 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி  கற்கோவளம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால்  சந்திரசேகரம் பிரசாந் அவர்களின் நிதியுதவியில் மீனவர்களுக்கான  உயிர்காக்கும் அங்கிகள்  (Life Jacket) இன்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


உயிர்காக்கும்  அங்கிகள் வழங்கும் நிகழ்வு கற்கோவளம் பொது மண்டபத்தில் சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.


உயிர்காக்கும் அங்கிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான  வி.மணிவண்ணன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வழங்கி வைத்தார்.


இதில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன்,  முன்னாள் யாழ்  மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெய பிரதாபன், கற்கோவளம் கடற்றொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


அண்மையில் உரிய பாதுகாப்பு அங்கி இன்றி கடற்றொளிலுக்கு சென்று நான்கு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர். இந்த் நிலையில் குறித்த உதவி  பெரிதும் பயனுடையதாக கருத்தப்படுகிறது

கற்கோவளம் பகுதியில் மீனவர்களுக்கு உயிர்காக்கும் அங்கிகள். யாழ்ப்பாணம் வடமராட்சி  கற்கோவளம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால்  சந்திரசேகரம் பிரசாந் அவர்களின் நிதியுதவியில் மீனவர்களுக்கான  உயிர்காக்கும் அங்கிகள்  (Life Jacket) இன்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.உயிர்காக்கும்  அங்கிகள் வழங்கும் நிகழ்வு கற்கோவளம் பொது மண்டபத்தில் சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.உயிர்காக்கும் அங்கிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான  வி.மணிவண்ணன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வழங்கி வைத்தார்.இதில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன்,  முன்னாள் யாழ்  மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெய பிரதாபன், கற்கோவளம் கடற்றொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.அண்மையில் உரிய பாதுகாப்பு அங்கி இன்றி கடற்றொளிலுக்கு சென்று நான்கு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர். இந்த் நிலையில் குறித்த உதவி  பெரிதும் பயனுடையதாக கருத்தப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement