இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஐயா இரா. நல்லக்கண்ணு மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
நல்லக்கண்ணு மறைவு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது,
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஐயா இரா. நல்லக்கண்ணு அவர்கள்
25.02.2026இல் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம். அன்னார் 101
அகவையில் காலமாகி இருந்தாலும் அவர் மறைவு ஒரு பேரிழப்பாகவே உலகத் தமிழர்தம்
உள்ளத்தில் தாக்கங்கொண்டுள்ளது.
இளமையிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்ற
தோழர் நல்லக்கண்ணு அவர்கள் காவல் சித்திரவதைக்கு ஆளானதோடு சதிவழக்கில்
தண்டிக்கப்பட்டு ஏழாண்டு சிறையில் கழித்தார். இந்திய நாடு சுதந்திரம் பெற்றதோடு
அவரது போராட்ட வாழ்வு முடியவில்லை. ஒரு கம்யூனிஸ்டாக உழைக்கும் மக்களின்
நலவுரிமைக்கான போராட்டக் களத்தில் அவர் முழுமையாக முன்னுக்கு நின்றார்.
நல்லக்கண்ணு என்றால் எளிமை என்று தமிழர்கள் போற்றுமளவுக்குப் புகழ்பெற்ற
போதிலும் அவர் ஒருபோதும் விளம்பரம் நாடியவரல்லர்! பதவிக்காகவோ
பணத்துக்காகவோ அரசியலைப் பயன்படுத்திக் கொண்டவரல்லர்.
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சாதிச் சிக்கலில் கவனஞ்செலுத்தி சமூகநீதிக்கான போராட்டத்தில் மென்மேலும் ஈடுபட்டதில் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதும், சுற்றுச் சூழலில் மிகுந்த அக்கறை கொண்டு, தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுப்பதில் வெற்றி கண்டதோடு, காவிரியில் மணல் கொள்ளையைத் தடுப்பதற்கான போராட்டத்திலும் ஒரு கூட்டமைப்பு உருவாக்கிக் களம் கண்டார் என்பதும்
தமிழ்நாட்டோடு, ஈழத் தமிழ்த் தேசமும் பதிந்து கொள்ள வேண்டிய முத்திரைச் செய்திகள்.
2008-09இல் ஈழத் தமிழர்க்கு எதிரான இனவழிப்புப் போரை ராஜபக்ச தீவிரப்படுத்திய
போது ”போரை நிறுத்து!” என்ற முழக்கத்தோடு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு
இயக்கத்தை நிறுவியதில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் தோழர் நல்லக்கண்னு
அவர்களுக்கு முதன்மைப் பங்குண்டு.
அந்தக் காலக்கட்டத்தில் நடந்த எல்லாப்
போராட்டங்களிலும் அவர் முன்னுக்கு நின்றார் என்பதை உலகத் தமிழர்கள் நன்றியுடன்
நினைவுகூர்வார்கள். முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்குப் பிறகு ஈடுசெய் நீதிக்கான
தொடர் போராட்டத்திலும் திரு நல்லக்கண்ணு முன்வரிசையில் நின்றார் என்பதை மறக்க
முடியாது.
தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித்
தோழர்களுக்கும், பொதுவாகத் தமிழக மக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லக்கண்ணு மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஐயா இரா. நல்லக்கண்ணு மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நல்லக்கண்ணு மறைவு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஐயா இரா. நல்லக்கண்ணு அவர்கள்25.02.2026இல் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம். அன்னார் 101அகவையில் காலமாகி இருந்தாலும் அவர் மறைவு ஒரு பேரிழப்பாகவே உலகத் தமிழர்தம்உள்ளத்தில் தாக்கங்கொண்டுள்ளது. இளமையிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்றதோழர் நல்லக்கண்ணு அவர்கள் காவல் சித்திரவதைக்கு ஆளானதோடு சதிவழக்கில்தண்டிக்கப்பட்டு ஏழாண்டு சிறையில் கழித்தார். இந்திய நாடு சுதந்திரம் பெற்றதோடுஅவரது போராட்ட வாழ்வு முடியவில்லை. ஒரு கம்யூனிஸ்டாக உழைக்கும் மக்களின்நலவுரிமைக்கான போராட்டக் களத்தில் அவர் முழுமையாக முன்னுக்கு நின்றார். நல்லக்கண்ணு என்றால் எளிமை என்று தமிழர்கள் போற்றுமளவுக்குப் புகழ்பெற்றபோதிலும் அவர் ஒருபோதும் விளம்பரம் நாடியவரல்லர் பதவிக்காகவோபணத்துக்காகவோ அரசியலைப் பயன்படுத்திக் கொண்டவரல்லர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சாதிச் சிக்கலில் கவனஞ்செலுத்தி சமூகநீதிக்கான போராட்டத்தில் மென்மேலும் ஈடுபட்டதில் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதும், சுற்றுச் சூழலில் மிகுந்த அக்கறை கொண்டு, தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுப்பதில் வெற்றி கண்டதோடு, காவிரியில் மணல் கொள்ளையைத் தடுப்பதற்கான போராட்டத்திலும் ஒரு கூட்டமைப்பு உருவாக்கிக் களம் கண்டார் என்பதும்தமிழ்நாட்டோடு, ஈழத் தமிழ்த் தேசமும் பதிந்து கொள்ள வேண்டிய முத்திரைச் செய்திகள். 2008-09இல் ஈழத் தமிழர்க்கு எதிரான இனவழிப்புப் போரை ராஜபக்ச தீவிரப்படுத்தியபோது ”போரை நிறுத்து” என்ற முழக்கத்தோடு இலங்கைத் தமிழர் பாதுகாப்புஇயக்கத்தை நிறுவியதில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் தோழர் நல்லக்கண்னுஅவர்களுக்கு முதன்மைப் பங்குண்டு. அந்தக் காலக்கட்டத்தில் நடந்த எல்லாப்போராட்டங்களிலும் அவர் முன்னுக்கு நின்றார் என்பதை உலகத் தமிழர்கள் நன்றியுடன்நினைவுகூர்வார்கள். முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்குப் பிறகு ஈடுசெய் நீதிக்கானதொடர் போராட்டத்திலும் திரு நல்லக்கண்ணு முன்வரிசையில் நின்றார் என்பதை மறக்கமுடியாது. தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித்தோழர்களுக்கும், பொதுவாகத் தமிழக மக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.