• Apr 29 2026

தகனமேடையில் இருந்த இரும்புத் தூண்களையும் விட்டுவைக்காத திருடர்கள்..! யாழில் சம்பவம்

Chithra / Dec 8th 2023, 12:19 pm
image

 

யாழில் இந்து மயானம் ஒன்றின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த சிரமம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகனமேடையில் இருந்த இரும்புத் தூண்களையும் விட்டுவைக்காத திருடர்கள். யாழில் சம்பவம்  யாழில் இந்து மயானம் ஒன்றின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த சிரமம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement