அமரர் தம்பிதுரை முத்துக்குமாரசாமி இறைவனடி சேர்ந்தார் என்னும் துயரச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றோம். அவரின் இழப்பு தமிழ் இனத்திற்கே பேரிழப்பாகும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
யாவராலும் அன்பாக குமார் அண்ணா என்று அழைக்கப்படும் அமரர் தம்பிதுரை முத்துக்குமாரசாமி இறைவனடி சேர்ந்தார் என்னும் துயரச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றோம்.
அண்ணார் தமிழுக்கும் தமிழர்களுக்குமாய் சேவை செய்வதற்காக தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்த பெருந்தகையாவார்.
எமது உறவுகளை இலங்கை அரசும் அரச படைகளும் வலிந்து காணாமல் ஆக்கியதற்கு நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கும் எமது போராட்டப் பாதையிலே அவரின் பங்களிப்பு ஒப்பற்றது.
நேரம் காலம் பாராது எமக்குரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய அறிவு ஆற்றல் மிக்க பண்பாளர். மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்தவரும் அமைதி சாந்தம் ஆகிய நற்குணங்கள் பொருந்திய மாமனிதர் ஆவார். அவரின் இழப்பு தமிழ் இனத்திற்கே பேரிழப்பாகும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆகிய நாம் அவரை பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்வதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்பிதுரை முத்துக்குமாரசாமியின் இழப்பு தமிழ் இனத்திற்கே பேரிழப்பு - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இரங்கல் அமரர் தம்பிதுரை முத்துக்குமாரசாமி இறைவனடி சேர்ந்தார் என்னும் துயரச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றோம். அவரின் இழப்பு தமிழ் இனத்திற்கே பேரிழப்பாகும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது யாவராலும் அன்பாக குமார் அண்ணா என்று அழைக்கப்படும் அமரர் தம்பிதுரை முத்துக்குமாரசாமி இறைவனடி சேர்ந்தார் என்னும் துயரச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றோம்.அண்ணார் தமிழுக்கும் தமிழர்களுக்குமாய் சேவை செய்வதற்காக தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்த பெருந்தகையாவார். எமது உறவுகளை இலங்கை அரசும் அரச படைகளும் வலிந்து காணாமல் ஆக்கியதற்கு நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கும் எமது போராட்டப் பாதையிலே அவரின் பங்களிப்பு ஒப்பற்றது. நேரம் காலம் பாராது எமக்குரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய அறிவு ஆற்றல் மிக்க பண்பாளர். மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்தவரும் அமைதி சாந்தம் ஆகிய நற்குணங்கள் பொருந்திய மாமனிதர் ஆவார். அவரின் இழப்பு தமிழ் இனத்திற்கே பேரிழப்பாகும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆகிய நாம் அவரை பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்வதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.