• Jun 28 2026

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி

Chithra / Jun 28th 2026, 4:46 pm
image


கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர், தொடர்ச்சியான தனிநபர் பரதநாட்டிய நிகழ்ச்சியால் உலக சாதனையை நிலைநாட்டினார். 


  ஐந்தே வயதான நாட்டிய தாரகை ரஜீவன் ஹம்சத்வனி, 6 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக தனிநபராக பரதநாட்டியம் ஆடியுள்ளார்.


இந்த சாதனை முயற்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதியில்  நடைபெற்றது. 


குறித்த சாதனையானது, ராபா உலக சாதனை புத்தகத்தில் இன்று பதிவு செய்யப்பட்டது. 


நிகழ்வின் இறுதியில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கணேஸ்வரன் அவர்களால் "உலக நாட்டிய இளவரசி" என்று மகுடம் சூட்டி வைக்கபட்டது. 


இந்த நிகழ்வில் ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன், ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பங்குபற்றினர். 


இந்த நிகழ்வில்  கலை ஆர்வலர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். 

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர், தொடர்ச்சியான தனிநபர் பரதநாட்டிய நிகழ்ச்சியால் உலக சாதனையை நிலைநாட்டினார்.   ஐந்தே வயதான நாட்டிய தாரகை ரஜீவன் ஹம்சத்வனி, 6 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக தனிநபராக பரதநாட்டியம் ஆடியுள்ளார்.இந்த சாதனை முயற்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதியில்  நடைபெற்றது. குறித்த சாதனையானது, ராபா உலக சாதனை புத்தகத்தில் இன்று பதிவு செய்யப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கணேஸ்வரன் அவர்களால் "உலக நாட்டிய இளவரசி" என்று மகுடம் சூட்டி வைக்கபட்டது. இந்த நிகழ்வில் ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன், ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பங்குபற்றினர். இந்த நிகழ்வில்  கலை ஆர்வலர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement