பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தெரிவிக்கப்படும் இனவாத கருத்துக்கள் அடிப்படையற்றவை. இவ்வாறான நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது. அவரின் நடத்தைகள் பற்றி அனைவரும் அறிவர் என்பதால், அவர் கூறும் விடயங்களை எவரும் கவனத்தில் கொள்வதில்லை என பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (19) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தைகள் தொடர்பில் அனைவரும் அறிவர். எனவே அவரால் கூறப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பதற்றமடையத் தேவையில்லை.
அவரால் தெரிவிக்கப்படும் இனவாத கருத்துக்கள் முக்கியத்துமுடையவையல்ல. அவை அடிப்படையற்றவை. இவ்வாறான நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் கலக்கமடையாது. மக்களும் பதற்றமடைய மாட்டார்கள். அவர்கள் அவற்றை அங்கீகரிக்கப் போவதுமில்லை என்றார்.
இதேவேளை பத்தரமுல்லையில் இன்று(19) நடைபெற்ற போர்வீரர்கள் நினைவு தின நிகழ்வுக்கு அரசியல் தலைவர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
"வெற்றி விழா நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை?" என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் முப்படைகளின் தளபதிகள் மட்டுமே கலந்துகொள்வர். இவர்களைத் தவிர வேறு எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை."என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களால் அரசு ஒருபோதும் கலக்கமடையாது - அமைச்சர் விஜித பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தெரிவிக்கப்படும் இனவாத கருத்துக்கள் அடிப்படையற்றவை. இவ்வாறான நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது. அவரின் நடத்தைகள் பற்றி அனைவரும் அறிவர் என்பதால், அவர் கூறும் விடயங்களை எவரும் கவனத்தில் கொள்வதில்லை என பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (19) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தைகள் தொடர்பில் அனைவரும் அறிவர். எனவே அவரால் கூறப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பதற்றமடையத் தேவையில்லை. அவரால் தெரிவிக்கப்படும் இனவாத கருத்துக்கள் முக்கியத்துமுடையவையல்ல. அவை அடிப்படையற்றவை. இவ்வாறான நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் கலக்கமடையாது. மக்களும் பதற்றமடைய மாட்டார்கள். அவர்கள் அவற்றை அங்கீகரிக்கப் போவதுமில்லை என்றார்.இதேவேளை பத்தரமுல்லையில் இன்று(19) நடைபெற்ற போர்வீரர்கள் நினைவு தின நிகழ்வுக்கு அரசியல் தலைவர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்."வெற்றி விழா நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை" என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்."இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் முப்படைகளின் தளபதிகள் மட்டுமே கலந்துகொள்வர். இவர்களைத் தவிர வேறு எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை."என்று அவர் மேலும் தெரிவித்தார்.