• Oct 06 2026

நாடு திரும்பிய மறுநாளே ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு வந்த அழைப்பு - FCID பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றின் உத்தரவு

Chithra / Oct 6th 2026, 10:52 am
image


முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் நேற்றிரவு இலங்கை திரும்பியுள்ளார்.


அவர் நாடு திரும்பியதைத் தொடர்ந்து, எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


‘சிறிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக அவரிடம் வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பபட்டிருந்த முன்பிணை மனு இன்று (6) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 


இதன்போது நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) பொறுப்பதிகாரியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி இது தொடர்பில் காரணிகளை முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்தது. 


 

நாடு திரும்பிய மறுநாளே ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு வந்த அழைப்பு - FCID பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றின் உத்தரவு முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் நேற்றிரவு இலங்கை திரும்பியுள்ளார்.அவர் நாடு திரும்பியதைத் தொடர்ந்து, எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.‘சிறிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக அவரிடம் வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பபட்டிருந்த முன்பிணை மனு இன்று (6) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) பொறுப்பதிகாரியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி இது தொடர்பில் காரணிகளை முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்தது.  

Advertisement

Advertisement

Advertisement