மலையகத்தில் சித்திரை மாத திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்களும் சில பகுதிகளில் வெளியிடங்களில் (கொழும்பு) வேலை செய்பவர்களும் இணைந்து இந்த தோட்டங்களில் அம்மன் திருவிழாவை சந்தோசமாக நடத்துகிறார்கள்.
வெளி இடங்களில் வேலை செய்து உங்களோட சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தால் ஊர் மக்கள் நடத்தும் திருவிழாக்களில் தோட்ட மக்களிடம் போய் நான் பெரியவன் நீ சின்னாள் என்று அவர்களிடம் போட்டி போடாமல் சண்டை பிடித்துக் கொள்ளாமல் திருவிழாவில் கலந்துகொண்டு சந்தோஷமா அம்மனை வழிபடுங்கள்.
நீங்கள் போய் ஊர் மக்களிடம் சண்டை பிடிப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. அவர்களிடம் போட்டி போடாதீர்கள். தோட்டத்தில் உள்ள மக்கள் அங்கு இருப்பதால்தான் கோயில் திருவிழா நடத்தப்படுகின்றது.
இதை புரிந்து கொள்ளுங்கள். காரணம் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் அங்குள்ள மக்கள் அவர்கள் மழை நனைந்து வெயில் காய்ந்து அவர்கள் உழைப்பில் வருடத்தில் ஒரு முறை கோயில் திருவிழாவிற்காக பணம் கொடுத்து திருவிழா நடத்துகிறார்கள்.
இதில் நாங்கள் போய் பெரிய பந்தா காட்டி சண்டை பிடிப்பது அவ்வளவு நல்லது கிடையாது. எனவே கோயில் விடயங்களில் நல்லதை நினைத்து நடந்து கொள்ளுங்கள்.
இது நமது மலையகம். நமது மூதாதையர்கள் நமக்கு விட்டுச் சென்ற இவ்வாறான புனித நிகழ்வுகளை நாம் பாதுகாக்க வேண்டும் அப்போதுதான் எதிர் காலத்தில் நமது பிள்ளைகள் தொடர்ந்து கொண்டு செல்ல வழி சமைக்க வேண்டும்.
மலையத்தில் சித்திரைமாத திருவிழா ஆரம்பம் மலையகத்தில் சித்திரை மாத திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்களும் சில பகுதிகளில் வெளியிடங்களில் (கொழும்பு) வேலை செய்பவர்களும் இணைந்து இந்த தோட்டங்களில் அம்மன் திருவிழாவை சந்தோசமாக நடத்துகிறார்கள்.வெளி இடங்களில் வேலை செய்து உங்களோட சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தால் ஊர் மக்கள் நடத்தும் திருவிழாக்களில் தோட்ட மக்களிடம் போய் நான் பெரியவன் நீ சின்னாள் என்று அவர்களிடம் போட்டி போடாமல் சண்டை பிடித்துக் கொள்ளாமல் திருவிழாவில் கலந்துகொண்டு சந்தோஷமா அம்மனை வழிபடுங்கள். நீங்கள் போய் ஊர் மக்களிடம் சண்டை பிடிப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. அவர்களிடம் போட்டி போடாதீர்கள். தோட்டத்தில் உள்ள மக்கள் அங்கு இருப்பதால்தான் கோயில் திருவிழா நடத்தப்படுகின்றது. இதை புரிந்து கொள்ளுங்கள். காரணம் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் அங்குள்ள மக்கள் அவர்கள் மழை நனைந்து வெயில் காய்ந்து அவர்கள் உழைப்பில் வருடத்தில் ஒரு முறை கோயில் திருவிழாவிற்காக பணம் கொடுத்து திருவிழா நடத்துகிறார்கள். இதில் நாங்கள் போய் பெரிய பந்தா காட்டி சண்டை பிடிப்பது அவ்வளவு நல்லது கிடையாது. எனவே கோயில் விடயங்களில் நல்லதை நினைத்து நடந்து கொள்ளுங்கள். இது நமது மலையகம். நமது மூதாதையர்கள் நமக்கு விட்டுச் சென்ற இவ்வாறான புனித நிகழ்வுகளை நாம் பாதுகாக்க வேண்டும் அப்போதுதான் எதிர் காலத்தில் நமது பிள்ளைகள் தொடர்ந்து கொண்டு செல்ல வழி சமைக்க வேண்டும்.