• Nov 22 2026

சிறுவனின் உயிரை பறித்த தற்காலிக மதில்

Ziya / Nov 21st 2026, 3:08 pm
image

பலாங்கொடை, பெங்கியவத்தை பகுதியில் வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மதில் இடிந்து விழுந்ததில், 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்தத் துயரச் சம்பவம் இன்று (21) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதில், பலாங்கொடை அல்மினாரா வித்தியாலயத்தில் தரம் 2 இல் கல்வி கற்றுவந்த செல்வராஜ் ரவீந்தர ரக்‌ ஷான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.


மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் கற்களுக்குள் சிக்கி உயிரிழந்ததாக அவரது தந்தை ராஜ் சாந்த பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


உயிரிழந்த மாணவனின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



சிறுவனின் உயிரை பறித்த தற்காலிக மதில் பலாங்கொடை, பெங்கியவத்தை பகுதியில் வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மதில் இடிந்து விழுந்ததில், 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தத் துயரச் சம்பவம் இன்று (21) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதில், பலாங்கொடை அல்மினாரா வித்தியாலயத்தில் தரம் 2 இல் கல்வி கற்றுவந்த செல்வராஜ் ரவீந்தர ரக்‌ ஷான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் கற்களுக்குள் சிக்கி உயிரிழந்ததாக அவரது தந்தை ராஜ் சாந்த பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.உயிரிழந்த மாணவனின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement