• Nov 21 2026

கடலுக்குள் காணாமல் போகும் இந்து மயானம்

Ziya / Nov 21st 2026, 2:48 pm
image

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரப் பகுதியில் அமைந்துள்ள கோரியடி இந்து மயானம் கடல் அரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அழிவின் விளிம்பில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


கடல் அரிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து நிலப்பகுதியை நோக்கி முன்னேறி வருவதால், மயானத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதனால் இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்காக மயானத்திற்கு வரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும், தற்போதைய நிலை தொடருமானால் எதிர்காலத்தில் மயானத்தின் அடையாளமே இல்லாமல் போகக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


எனவே, கோரியடி இந்து மயானத்தைப் பாதுகாத்து உரிய முறையில் புனரமைப்பதற்கு பருத்தித்துறை மக்கள், புலம்பெயர் உறவுகள், அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பாரம்பரியமான இந்து மயானத்தைப் பாதுகாப்பதுடன், மக்களின் இறுதிக் கிரியைகளுக்கான வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் புனரமைப்புப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.


கடலுக்குள் காணாமல் போகும் இந்து மயானம் யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரப் பகுதியில் அமைந்துள்ள கோரியடி இந்து மயானம் கடல் அரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அழிவின் விளிம்பில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.கடல் அரிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து நிலப்பகுதியை நோக்கி முன்னேறி வருவதால், மயானத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்காக மயானத்திற்கு வரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும், தற்போதைய நிலை தொடருமானால் எதிர்காலத்தில் மயானத்தின் அடையாளமே இல்லாமல் போகக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.எனவே, கோரியடி இந்து மயானத்தைப் பாதுகாத்து உரிய முறையில் புனரமைப்பதற்கு பருத்தித்துறை மக்கள், புலம்பெயர் உறவுகள், அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாரம்பரியமான இந்து மயானத்தைப் பாதுகாப்பதுடன், மக்களின் இறுதிக் கிரியைகளுக்கான வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் புனரமைப்புப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement