• Nov 19 2026

பாடசாலைப் போசாக்கு உணவு காலை 8.30 மணிக்கு முன்னரே வழங்கப்பட வேண்டும்– ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

Ziya / Nov 19th 2026, 11:37 am
image

காலை உணவின்றிப் பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் பசியால் கற்றலில் இடர்படுவதைத் தவிர்கும் நோக்கில் வழங்கப்படும் போசாக்கு உணவானது சில பாடசாலைகளில் பத்து மணிக்குக் கூட வழங்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாடசாலைகளில் வழங்கப்படும் போசாக்கு உணவை காலை எட்டரைக்கு முன்னர் வழங்கி முடிப்பதை கல்வி வலயங்கள் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.


அதேவேளை பாடசாலைகளில் வழங்கப்படும் போசாக்கு உணவினுடைய தரம் மற்றும் அளவு என்பவற்றிலும், உணவு தயாரிக்கும் சமையலறைகளில் சுகாதார நியமங்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் கல்வி வலய மேற்பார்வைக்குழுக்கள் கூடுதல் கவனஞ்செலுத்த வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.


பாடசாலைப் போசாக்கு உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரோகினீ குமாரி விஜேரத்னவால் 18.11.2026இன்று முன்மொழியப்பட்ட சபை ஒத்திவைப்புவேளையின்போதான பிரேரணையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.


இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


பாடசாலைப் போசாக்கு உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோகினீ குமாரி விஜேரத்ன  இப்பிரேரணை வரவேற்புக்குரியது.


இத்திட்டத்தை சுற்றறிக்கைகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதில் கூட சமகாலத்தில் நிலவும் குறைபாடுகளை களையவேண்டும் என்பதையே நாம் கோருகிறோம்.


காலை உணவின்றிப் பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் பசியால் கற்றலில் இடர்படுவதைத் தவிர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால், இன்னமும் சில பாடசாலைகளில் பத்து மணிக்குக் கூட இவ் உணவு வழங்கப்படுகிறது. எனவே, சுற்றறிக்கைக்கு அமைவாக, காலை எட்டரைக்கு முன்னதாக இவ் உணவு வழங்கப்பட்டு நிறைவு செய்வதை கல்வி வலயங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.


தற்போதைய உணவுப் பொருட்களின் விலைகளுக்கு மத்தியில், வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி, உரிய தரத்திலும் அளவிலும் அனைத்து பாடசாலைகளிலும் உணவு வழங்கப்படுகின்றதா?


ஒவ்வொருநாளும் சமைக்கப்படும் உணவை காண்பிப்பதற்காக பாடசாலைகளில் இருந்து அனுப்பப்படும் அதே அளவு, அதே தரத்திலான உணவு தான் அன்றைய நாள் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கும் கிடைக்கிறதா? உணவு தயாரிக்கும் சமையலறைகள் சுகாதார நியமங்களைப் பின்பற்றுகின்றனவா? என்பவற்றை வலயமட்ட மேற்பார்வைக்குழுக்கள் அனைத்துப் பாடசாலைகளிலும் முன்னறிவிப்பின்றிச் சென்று பார்வையிடவேண்டும்.


ஒரே வகுப்பில் சில பிள்ளைகள் உணவருந்தும் போது ஏனைய பிள்ளைகள் விலகியிருக்கும் சூழலுக்கான காரணங்கள் என்ன? பிள்ளைகள் தயக்கமின்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் சூழலை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களுக்குப் பங்குண்டு. ஆசிரியர்களும் பிள்ளைகளுடன் அமர்ந்து உணவருந்தும் நடைமுறை அனைத்துப் பாடசாலைகளிலும் பின்பற்றப்படவேண்டும்.


சில முன்மாதிரிப் பாடசாலைகளில் வீட்டுத் தோட்டங்களையும் பாடசாலைத் தோட்டங்களையும் உணவுத்திட்டத்துடன் இணைத்து பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்நடைமுறையை ஏனைய பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்துமாறு கல்வி அமைச்சைக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

பாடசாலைப் போசாக்கு உணவு காலை 8.30 மணிக்கு முன்னரே வழங்கப்பட வேண்டும்– ரவிகரன் எம்.பி வலியுறுத்தல் காலை உணவின்றிப் பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் பசியால் கற்றலில் இடர்படுவதைத் தவிர்கும் நோக்கில் வழங்கப்படும் போசாக்கு உணவானது சில பாடசாலைகளில் பத்து மணிக்குக் கூட வழங்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாடசாலைகளில் வழங்கப்படும் போசாக்கு உணவை காலை எட்டரைக்கு முன்னர் வழங்கி முடிப்பதை கல்வி வலயங்கள் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.அதேவேளை பாடசாலைகளில் வழங்கப்படும் போசாக்கு உணவினுடைய தரம் மற்றும் அளவு என்பவற்றிலும், உணவு தயாரிக்கும் சமையலறைகளில் சுகாதார நியமங்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் கல்வி வலய மேற்பார்வைக்குழுக்கள் கூடுதல் கவனஞ்செலுத்த வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.பாடசாலைப் போசாக்கு உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரோகினீ குமாரி விஜேரத்னவால் 18.11.2026இன்று முன்மொழியப்பட்ட சபை ஒத்திவைப்புவேளையின்போதான பிரேரணையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,பாடசாலைப் போசாக்கு உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோகினீ குமாரி விஜேரத்ன  இப்பிரேரணை வரவேற்புக்குரியது.இத்திட்டத்தை சுற்றறிக்கைகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதில் கூட சமகாலத்தில் நிலவும் குறைபாடுகளை களையவேண்டும் என்பதையே நாம் கோருகிறோம்.காலை உணவின்றிப் பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் பசியால் கற்றலில் இடர்படுவதைத் தவிர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால், இன்னமும் சில பாடசாலைகளில் பத்து மணிக்குக் கூட இவ் உணவு வழங்கப்படுகிறது. எனவே, சுற்றறிக்கைக்கு அமைவாக, காலை எட்டரைக்கு முன்னதாக இவ் உணவு வழங்கப்பட்டு நிறைவு செய்வதை கல்வி வலயங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.தற்போதைய உணவுப் பொருட்களின் விலைகளுக்கு மத்தியில், வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி, உரிய தரத்திலும் அளவிலும் அனைத்து பாடசாலைகளிலும் உணவு வழங்கப்படுகின்றதாஒவ்வொருநாளும் சமைக்கப்படும் உணவை காண்பிப்பதற்காக பாடசாலைகளில் இருந்து அனுப்பப்படும் அதே அளவு, அதே தரத்திலான உணவு தான் அன்றைய நாள் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கும் கிடைக்கிறதா உணவு தயாரிக்கும் சமையலறைகள் சுகாதார நியமங்களைப் பின்பற்றுகின்றனவா என்பவற்றை வலயமட்ட மேற்பார்வைக்குழுக்கள் அனைத்துப் பாடசாலைகளிலும் முன்னறிவிப்பின்றிச் சென்று பார்வையிடவேண்டும்.ஒரே வகுப்பில் சில பிள்ளைகள் உணவருந்தும் போது ஏனைய பிள்ளைகள் விலகியிருக்கும் சூழலுக்கான காரணங்கள் என்ன பிள்ளைகள் தயக்கமின்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் சூழலை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களுக்குப் பங்குண்டு. ஆசிரியர்களும் பிள்ளைகளுடன் அமர்ந்து உணவருந்தும் நடைமுறை அனைத்துப் பாடசாலைகளிலும் பின்பற்றப்படவேண்டும்.சில முன்மாதிரிப் பாடசாலைகளில் வீட்டுத் தோட்டங்களையும் பாடசாலைத் தோட்டங்களையும் உணவுத்திட்டத்துடன் இணைத்து பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்நடைமுறையை ஏனைய பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்துமாறு கல்வி அமைச்சைக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement