கடும் காற்றால் திசைமாறி நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்பிடியாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் இராமேஸ்வரம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மீன்பிடியாளரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில், கடும் காற்றின் தாக்கத்தால் திசைமாறி நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த மீன்பிடியாளரை நெடுந்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட அவர் பின்னர் நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பொலிசார், மீனவர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் தத்தளித்த தமிழக மீனவர்; யாழ். மீனவர்களின் மனிதாபிமான செயல் கடும் காற்றால் திசைமாறி நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்பிடியாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.தமிழகம் இராமேஸ்வரம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மீன்பிடியாளரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளார்.நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில், கடும் காற்றின் தாக்கத்தால் திசைமாறி நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த மீன்பிடியாளரை நெடுந்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட அவர் பின்னர் நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பொலிசார், மீனவர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.