கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா - கொட்டிகாவத்தை பகுதியில் முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தலைவர், 2022.08.02 அன்று சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, குறித்த குற்றத்திற்காக சந்தேகநபர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநராக செயல்பட்ட சந்தேகநபர், வியாழக்கிழமை (25) காலை மாலம்பே - தலாஹேன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரிடமிருந்து 05 கிராம் 430 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தலாஹேன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அதேநேரம், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 02 வழக்குகள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.
கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட சந்தேக நபர் கைது. கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.முல்லேரியா - கொட்டிகாவத்தை பகுதியில் முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தலைவர், 2022.08.02 அன்று சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, குறித்த குற்றத்திற்காக சந்தேகநபர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநராக செயல்பட்ட சந்தேகநபர், வியாழக்கிழமை (25) காலை மாலம்பே - தலாஹேன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், அவரிடமிருந்து 05 கிராம் 430 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகநபர் தலாஹேன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.அதேநேரம், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 02 வழக்குகள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.