• Oct 29 2026

கடையில் பொருட்களை திருடிய சந்தேகநபர் கைது!

Ziya / Oct 29th 2026, 5:05 pm
image

கடந்த 25 ஆம் திகதி தலவாக்கலை நகரில் உள்ள கடையொன்றில் பொருட்களை திருடிச்சென்ற சந்தேகநபர், பல இணைய தளத்தில் களிலும் தேசிய பத்திரிகைகளிலும் நேற்று செய்தி வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.


சமூக வலைத்தளம் ஊடாக இத்திருட்டு தொடர்பான செய்தி பரப்பப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் உடுபூசல்லாவ, வால்டீமார் தோட்டப் பிரிவில் (Waldemar Factory Division) நடமாடிக் கொண்டிருந்தபோது பிரதேசவாசிகளின் அவதானிப்பிற்கு உள்ளாகியுள்ளார். 


அதற்கமைய உடனடியாக செயற்பட்ட பிரதேச முக்கியஸ்தர்களும் இளைஞர்களும் இணைந்து சந்தேகநபரைப் பிடித்து உடுப்புஸ்சல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


சந்தேகநபரை விரைவாக அடையாளம் காண்பதற்கும் கைது செய்வதற்கும் தேசிய பத்திரிகைகள் மற்றும் இணையதள சேவை சேவைகள் வழங்கிய செய்திப் பிரச்சாரம் பெரும் உதவியாக இருந்ததாகத் தெரிவித்து, பிரதேச இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடையில் பொருட்களை திருடிய சந்தேகநபர் கைது கடந்த 25 ஆம் திகதி தலவாக்கலை நகரில் உள்ள கடையொன்றில் பொருட்களை திருடிச்சென்ற சந்தேகநபர், பல இணைய தளத்தில் களிலும் தேசிய பத்திரிகைகளிலும் நேற்று செய்தி வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.சமூக வலைத்தளம் ஊடாக இத்திருட்டு தொடர்பான செய்தி பரப்பப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் உடுபூசல்லாவ, வால்டீமார் தோட்டப் பிரிவில் (Waldemar Factory Division) நடமாடிக் கொண்டிருந்தபோது பிரதேசவாசிகளின் அவதானிப்பிற்கு உள்ளாகியுள்ளார். அதற்கமைய உடனடியாக செயற்பட்ட பிரதேச முக்கியஸ்தர்களும் இளைஞர்களும் இணைந்து சந்தேகநபரைப் பிடித்து உடுப்புஸ்சல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.சந்தேகநபரை விரைவாக அடையாளம் காண்பதற்கும் கைது செய்வதற்கும் தேசிய பத்திரிகைகள் மற்றும் இணையதள சேவை சேவைகள் வழங்கிய செய்திப் பிரச்சாரம் பெரும் உதவியாக இருந்ததாகத் தெரிவித்து, பிரதேச இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement