எங்களது இன விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவு அளித்து எமது இனம் தங்கள் காலத்தில் விடுதலை பெற்றிட சகல ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைதத் தொடர்ந்து அவரை வாழ்த்தியும் கோரிக்கை விடுத்தும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் உள்ளதாவது,
இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகிய நாம் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தங்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றோம்
தமிழ் நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்த அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக தமிழக வெற்றிக்கழகத்தை ஆரம்பித்து மூன்று வருடகாலத்தில் அரசியல் அரங்கில் உள்ள எதிர்ப்புக்கள் அனைத்தையும் முறியடித்து கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற்ற தனிக்கட்சியாக தங்கள் கட்சியை மிளிர வைத்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட தங்களுக்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பில் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
இந்த மாற்றத்திற்கான பயணத்தில் தாங்கள் காட்டிய கொள்கை உறுதிப்பாடு மற்றும், பொறுமை வியக்கத்தக்கது அதன் மூலம் மத சார்பற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆசனப் பெரும்பான்மையை நிரூபித்து தமிழ்நாட்டு அரசின் முதல்வராகி அரை நூற்றாண்டு வரலாற்றை மாற்றியமைத்து ஒரு அரசியல் மாற்றத்திற்கான ஆரம்பத்தை பதவி ஏற்ற அதே மேடையிலேயே ஆரம்பித்ததும் ஒரு மாற்றமே.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, இலங்கைத்தமிழர்கள் ஆகிய நாம் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு இனமாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டவர் என்பதையும் நாம் அனைவரும் நன்கு அறிவோம். 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட வட- கிழக்கு மாகாணங்கள் இணைந்த எமது தாயகத்தில் எங்களது மொழி, கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் நிலவுரிமை ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கும் வகையிலான ஒரு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை இலக்காகக் கொண்டு போராடிவருகின்றோம் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
எனவே, எங்களது இன விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவு அளித்து எமது இனம் தங்கள் காலத்தில் விடுதலை பெற்றிட சகல ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம் மீண்டும் தாங்களும் தமிழக வெற்றிக்கழகமும் தமிழ் நாட்டின் மிகச்சிறநத அரசாக செயற்பட பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது இன விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள் - முதலமைச்சர் விஜயிடம் தமிழரசுக்கட்சி கோரிக்கை எங்களது இன விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவு அளித்து எமது இனம் தங்கள் காலத்தில் விடுதலை பெற்றிட சகல ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைதத் தொடர்ந்து அவரை வாழ்த்தியும் கோரிக்கை விடுத்தும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் உள்ளதாவது, இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகிய நாம் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தங்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றோம்தமிழ் நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்த அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக தமிழக வெற்றிக்கழகத்தை ஆரம்பித்து மூன்று வருடகாலத்தில் அரசியல் அரங்கில் உள்ள எதிர்ப்புக்கள் அனைத்தையும் முறியடித்து கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற்ற தனிக்கட்சியாக தங்கள் கட்சியை மிளிர வைத்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட தங்களுக்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பில் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்இந்த மாற்றத்திற்கான பயணத்தில் தாங்கள் காட்டிய கொள்கை உறுதிப்பாடு மற்றும், பொறுமை வியக்கத்தக்கது அதன் மூலம் மத சார்பற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆசனப் பெரும்பான்மையை நிரூபித்து தமிழ்நாட்டு அரசின் முதல்வராகி அரை நூற்றாண்டு வரலாற்றை மாற்றியமைத்து ஒரு அரசியல் மாற்றத்திற்கான ஆரம்பத்தை பதவி ஏற்ற அதே மேடையிலேயே ஆரம்பித்ததும் ஒரு மாற்றமே.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, இலங்கைத்தமிழர்கள் ஆகிய நாம் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு இனமாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டவர் என்பதையும் நாம் அனைவரும் நன்கு அறிவோம். 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட வட- கிழக்கு மாகாணங்கள் இணைந்த எமது தாயகத்தில் எங்களது மொழி, கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் நிலவுரிமை ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கும் வகையிலான ஒரு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை இலக்காகக் கொண்டு போராடிவருகின்றோம் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.எனவே, எங்களது இன விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவு அளித்து எமது இனம் தங்கள் காலத்தில் விடுதலை பெற்றிட சகல ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம் மீண்டும் தாங்களும் தமிழக வெற்றிக்கழகமும் தமிழ் நாட்டின் மிகச்சிறநத அரசாக செயற்பட பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.