• Aug 11 2026

ஒப்பந்தம் சாத்தியம்; ஆனால் ஹோர்முஸ் நீரிணை உடனே திறக்கப்படாது! ஈரான் அறிவிப்பு

Chithra / Aug 9th 2026, 11:31 am
image


ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மற்றும் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.


எனினும், குறித்த ஒப்பந்தம் மட்டும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கு போதுமானதாக இருக்காது என ஈரான் குறிப்பிட்டுள்ளது.


ஹோர்முஸ் நீரிணையின் இருபுறங்களிலும் அமைந்துள்ள ஈரான் மற்றும் ஓமான் இடையே விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், அதன் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுடன் ஆரம்பமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரந்த ஒப்பந்தத்தில், இந்த மூலோபாய நீர்வழியின் கட்டுப்பாடு தொடர்பான உடன்பாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கான புதிய போக்குவரத்து பாதை தொடர்பில் ஈரானும் ஓமானும் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு “மிகவும் நெருக்கமாக” இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஃச்சி தெரிவித்துள்ளார்.


எனினும், நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்கா ஈரானுக்கு வழங்க வேண்டிய நஷ்டஈடு உள்ளிட்ட மேலும் பல நிபந்தனைகளைப் பொறுத்தே அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.


முன்னர் பயன்படுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து பிரிவுத் திட்டம் இனி தெஹ்ரானுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்ட அவர், நிரந்தர கப்பல் போக்குவரத்துப் பாதை தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, ஓமானுடன் தற்காலிக பாதை ஒன்றை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


போருக்கு முன்னர் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது.


இதனிடையே, ஈரான் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மற்றும் வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் சாத்தியம்; ஆனால் ஹோர்முஸ் நீரிணை உடனே திறக்கப்படாது ஈரான் அறிவிப்பு ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மற்றும் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.எனினும், குறித்த ஒப்பந்தம் மட்டும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கு போதுமானதாக இருக்காது என ஈரான் குறிப்பிட்டுள்ளது.ஹோர்முஸ் நீரிணையின் இருபுறங்களிலும் அமைந்துள்ள ஈரான் மற்றும் ஓமான் இடையே விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், அதன் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுடன் ஆரம்பமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரந்த ஒப்பந்தத்தில், இந்த மூலோபாய நீர்வழியின் கட்டுப்பாடு தொடர்பான உடன்பாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கான புதிய போக்குவரத்து பாதை தொடர்பில் ஈரானும் ஓமானும் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு “மிகவும் நெருக்கமாக” இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஃச்சி தெரிவித்துள்ளார்.எனினும், நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்கா ஈரானுக்கு வழங்க வேண்டிய நஷ்டஈடு உள்ளிட்ட மேலும் பல நிபந்தனைகளைப் பொறுத்தே அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.முன்னர் பயன்படுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து பிரிவுத் திட்டம் இனி தெஹ்ரானுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்ட அவர், நிரந்தர கப்பல் போக்குவரத்துப் பாதை தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, ஓமானுடன் தற்காலிக பாதை ஒன்றை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.போருக்கு முன்னர் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது.இதனிடையே, ஈரான் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மற்றும் வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement